Karur

News November 1, 2024

30 நாட்களுக்குள் பதிவு செய்ய கெடு

image

கரூரில் குழந்தை, முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்,பெண்கள் குழந்தைகள் விடுதிகள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். பதிவு பெறாமல் செயல்படும் இல்லங்கள் பதிவு செய்ய விண்ணப்பிக்க 1 மாத அவகாசம் வழங்கப்படுகிறது. தவறினால் இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1. கரூரில் பூக்களின் விலை உயர்வு
2. முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு
3. பசுபதி ஈஸ்வரன் கோயிலில் வானவேடிக்கை நிகழ்வு
4. தரகம்பட்டியில் தாசில்தாருடன் வாக்குவாதம்
5. கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
6. மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
7. கரூர் எம்.பி தீபாவளி வாழ்த்து

News October 31, 2024

கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று (31.10.2024) மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2024

முன்னாள் முதலமைச்சருக்கு வரவேற்பு

image

சேலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திரு உருவ சிலைக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சேலத்தில் இருந்து கரூர் வழியாக செல்லும்போது, அதிமுக சார்பில் முன்னாள் அமையச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News October 31, 2024

தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்!

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது.
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌.
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌.
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌. SHARE IT

News October 30, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1. கரூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
2.கரூரில் மழை கடும் பனிப்பொழிவால் அவரை விலை உயர்வு
3.நொய்யல்லில் நிலக்கடலை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
4. கரூரில் தீபாவளி பண்டிகையொட்டி வெல்லம் விலை உயர்வு
5.கரூர் சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்,தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம்.

News October 30, 2024

கரூர் மாவட்டத்தில் 8.89 லட்சம் வாக்காளர்கள்

image

கரூர் மாவட்டத்தில் 2025 வாக்காளர் பட்டியலில் 4 தொகுதிகளில் வாக்காளர்கள் விவரம், அரவக்குறிச்சிமொத்த வாக்காளர்கள்- 2,10,970, பூத்,253,கரூர்மொத்த வாக்காளர்கள்-2,40,170, பூத் ,270, கிருஷ்ணராயபுரம்மொத்த வாக்காளர்கள்-2,11,069, பூத்,260,குளித்தலை மொத்த வாக்காளர்கள்- 2,27,064, பூத், 274, என கரூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 8,89,273, மொத்த பூத்-1,055 என தொகுதி வாரியாக வாக்காளர்கள் கணக்கிடப்பட்டுள்ளது

News October 30, 2024

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

image

கரூர் மாவட்டம் புது காளியம்மன் கோவில் காமராஜரை சேர்ந்தவர் செல்வராஜ் 54, இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் நேற்று மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து செல்வராஜை கரூர் டவுன் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

News October 30, 2024

கரூரில் முன்னாள் அமைச்சர் மீது புகார்

image

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கானிடம், கரூர் மேற்கு மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது, மாநில இணை செயலாளர் கணேசன், அண்ணா தொழிற்சங்க மத்திய நகர செயலாளர் ஓம் சக்தி சேகர் ஆகியோர் இருந்தனர்.

News October 30, 2024

தீபாவளி பண்டிகையொட்டி வெல்லம் விலை உயர்வு

image

க.பரமத்தி, நொய்யல் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து, கரும்பு ஆலைகளுக்கு விற்கின்றனர். இதிலிருந்து ஆலை உரிமையாளர்கள் தயாரித்த வெல்லம், இன்று சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. அப்போது, 30 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1500க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1650க்கும் விற்பனையானது. தற்போது பண்டிகை காலம் என்பதால் வெல்லம் விலை உயர்வு என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!