India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜன.16ல் திருவள்ளுவர் தினம், 26ல் குடியரசு தினம் வருகிறது. அன்றைய நாட்-களில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.,2, எப்.எல்.,3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் இணைந்த பார் களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விதி-களை மீறி மதுபானம் விற்பனை செய்யும பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்-கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <

கரூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <

கரூர் மாவட்டம் கூடலூர் பனையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி (42). இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சின்னதாராபுரம் போலீசார் மது விற்ற மகேஸ்வரி சக்தி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு, நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். வரும், 17ல் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில், மாடுபிடி வீரர்கள் மற்றும் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவுகளை karur.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை காலை 8:00 மணி முதல் 16ம் தேதி காலை 8:00 மணி வரை இணையவழி பதிவுகள் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு!

கரூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று(ஜன.13) மின் பராமரிப்பு பணி காரணமாக சின்னப்பனையூர், ஆலத்துார்,களத்துப்பட்டி,செம்மேடு,ரெங்காச்சிபட்டி,பாரதி நகர்,புரசம்பட்டி, இந்திரா நகர், வீராச்சிபட்டி, பனையூர், நெய்தலுார் காலனி சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு,நெய்தலுார்,ராமாயி பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கரூரில் திருவள்ளுவர் தினம் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினம் 26.01.2026 (திங்கள்கிழமை) ஆகிய தினங்களில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர்தினமாக (DRY DAY) அனுசரித்து கடைகள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.