India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் சேய் நலனை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் தாய் சேய் நலம் உதவி மற்றும் கண்காணிப்பு மையம் மற்றும் உதவி கண்காணிப்பு மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் 9342238410, 9342216978, 9363209897, என்ற எண்களில் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக இத்துறையின் வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். என கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல்,இ.ஆ.ப., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இத்தகைய இல்லங்களுக்கு லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டும் இல்லை என்றால் சீல் வைக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு தாட்கோ மூலம் கலைஞர் கடன் திட்டம் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கரூர் மற்றும் கிளை மேலாளர், தாட்கோ வங்கி (போன் 04324 262636, 89258 14613, 86675 47964 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant-Intermediate), ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கிறது. மேலும் தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யவும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் இணைந்து திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் மற்றும் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிகளில் நடக்கிறது என மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான மாநில விருது பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவம், தோட்டக்கலைத்துறை இணையதளம் www.tnhorticulture.tn.gov.in மூலம் பதிவிறக்கம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், https://www.vidyalaksmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தங்கள் பகுதிக்குரிய வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் இன்று அறிவிப்பு செய்தார்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC-Gr-2, Gr-2 (முதன்மைத் தேர்வு) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.11.2024 அன்று சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
Sorry, no posts matched your criteria.