India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவருக்கு விடுப்பு மற்றும் 2 மாதம் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நடராஜன் நேற்று(ஏப்.25) நீதிபதி சந்தோஷம் பணியில் இருந்தபோது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் ஜெகதாபியில் மாரியப்பனுக்கும், அவரது தந்தை மாணிக்கத்துக்கும் வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரனை வரவழைத்து, மாரியப்பனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதில் மாரியப்பன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், மாணிக்கத்தை இன்று கைது செய்தனர். மேலும், கொலையை மறைக்க விபத்தில் மகன் இறந்தது போல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.
தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி கரூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில் கரூவூராருக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. சுயம்பு லிங்கமான பசுபதீஸ்வரருக்கு, பசு தானாக பால் சுரந்ததாக நம்பப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இக்கோவில் திராவிடக் கட்டடக்கலையைக் கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து நாளை மறுநாள் (ஏப்.,26) கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் ஆலோசனை முகாம் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார் .
கடவூர் தாலுகா ஒடுவம்பட்டி சேர்ந்தவர் பாபு மகள் ராகவி (18). இவர் நர்சிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாபு சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (65). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கரூர் மண்மங்கலம் குமாரசாமி கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 24 மணி நேரமும் கண்காணிக்க, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள “ஸ்ட்ராங் ரூம்” என்னும் அறைக்கு சென்று, முறையாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறதா என ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (26). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் தினேஷ் என்பவருடன் காணியாளம்பட்டி சாலையில் அதிவேகமாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.