Karur

News November 8, 2024

கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

கரூர் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் பணியாளர் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

கரூரில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அறை எண் 108இல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்  என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 8, 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் 

image

கரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் இடையே மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் இராசாண்டர் திருமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்களை இராசாண்டர் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்  கௌரவித்தனர்.

News November 7, 2024

கரூர்: சாதனை படைத்த குழந்தையை பாராட்டிய எஸ்பி

image

கரூர், தாந்தோணிமலையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரின் 2 வயது 5 மாதங்களேயான மகன்  விஸ்வஜித்கிருஷ்ணன், 50 மீட்டர் தூரத்தை 19.18 வினாடிகளில் ஓடி, இதற்கு முந்தைய 25.42 வினாடிகளில் ஓடிய சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்து “INDIA BOOK OF RECORDS” இல் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த குழந்தையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.

News November 7, 2024

உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை 

image

கரூர் கோடங்கிபட்டி அருகே, கரூர்- திருச்சி பைபாஸ் சாலை செல்கிறது. இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஓய்வின்றி வாகனங்கள் செல்வதால், கோடங்கிபட்டி பிரிவு சாலையை இரண்டு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு அஞ்சி வருகின்றனர். இந்த பிரிவுகளில் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோர்கிக்கை எழுந்துள்ளது.

News November 7, 2024

கரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

image

கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 7, 2024

பாலமுருகனுக்கு ஐந்தாவது நாள் கந்த சஷ்டி விழா

image

ஶ்ரீலஶ்ரீ திருப்பதி சுவாமிகள் மடாலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பாலமுருகனுக்கு கந்தர் சஷ்டி விழாவின் ஐந்தாவது நாளான இன்று சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆராதனைகள் 6 நாட்களும் நடைபெறும். அது சமயம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பாலமுருகனின் அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

News November 7, 2024

கரூரில் இலவச அழகுகலைப் பயிற்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கப்பெறும். இப்பயிற்சியானது கரூரில் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 8072828762, 9025808570 எண்ணிற்கு அழைக்கலாம்.

News November 7, 2024

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை: தக்காளி ரூ.35,30 வெங்காயம் ரூ.75, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.70, கத்தரிக்காய் ரூ.40,35, பாகற்காய் ரூ.40, சுரக்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.35, பச்ச அவரை ரூ.100,80, பரங்கிக்காய் ரூ.15, மாங்காய் ரூ.50, புடலங்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.15, கருவேப்பிலை ரூ.60, புதினா ரூ.100, கொத்தமல்லி ரூ.75, ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

News November 7, 2024

கரூரில் குடும்ப அட்டைதாரருக்கு குறைதீர்நாள் கூட்டம்

image

கரூரில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 09-11-2024 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகையால் பொதுமக்கள் குடும்ப அட்டை சம்பந்தமாக புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.