Karur

News November 9, 2024

கரூர்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை ➤பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ➤ரயில் பயணிகள் கவனத்திற்கு ➤தனியார் நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு ➤வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ➤ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

News November 9, 2024

ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம்

image

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம், வடிவேல் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார் . உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பித்தனர். சிறப்பித்தனர்

News November 9, 2024

கரூர்: மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை

image

கரூர், வெங்கமேடு, விவிஜி நகரை சேர்ந்தவர் செல்வகணேஷ். அவர் இன்று தனது 6 மாத கர்ப்பிணியாக மனைவி கல்பனா மற்றும் 6 வயது மகள் சாரதிபாலாவை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் மயக்க நிலையில் இருந்த செல்வகணேஷ் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 9, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

பொறியியல் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர் வழியாக இயக்கப்படும் திருச்சி பாலக்காடு பயணிகள் ரயில் 9 நாட்களுக்கு சூலூர் சாலை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரூர் வழியாக திருச்சியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சூலூர் சாலை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

News November 9, 2024

வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

image

கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு- கரூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு சிறப்பு பயிற்சி சேர்க்கை முகாம் (9.11.2024) சனிக்கிழமை இன்று தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 3 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சீருடை, பயிற்சி புத்தகங்கள், உணவு, தங்குமிடம், காப்பீடு மற்றும் 3 மாதத்திற்கு வேலை வாய்ப்பின் போது ஊக்கத் தொகை வழங்கப்படும். 

News November 9, 2024

ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

image

கரூர் மாவட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரியில் ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு குறித்த பயிற்சியானது வரும் (13.11.24) அன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் காளான் வளர்க்கும் தொழில்நுட்பங்கள், பால் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நேரடி களப்பயிற்சி காணலாம்.

News November 8, 2024

மீட்கப்பட்ட குழந்தை தகவல் தெரிவிக்க ஆட்சியர் வேண்டுகோள்

image

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூன் 11இல் பிறந்த தோகைமலை ஒன்றியம் காவல்காரன்பட்டியை சேர்ந்த ஆண் குழந்தை, கைவிடப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு பெரம்பலூர் மாதா அன்பு இல்லம் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். குழந்தையுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் 04324296056, 8903331098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

கரூர் மாவட்டத்திற்கு மழை பெய்யும்

image

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 8, 2024

வாக்கு சாவடி மையங்களில் பெயர் நீக்குதல், சேர்த்தல் தேதி

image

கரூர் மாவட்டத்திலுள்ள 1055 வாக்குச்சாவடி மையங்களில் எதிர்வரும் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுகிழமை) ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.

News November 8, 2024

கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

கரூர் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் பணியாளர் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.