India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤கரூரில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு ➤2026இல் பலமான கூட்டணி அமைச்சர் பேச்சு ➤மக்களிடம் மனு பெற்ற கலெக்டர் ➤108 ஆம்புலன்ஸில் வேலைவாய்ப்பு ➤நாளை கரூர் பகுதியில் மின்தடை ➤தவெக சார்பில் கொடியேற்றும் நிகழ்வு ➤அடிக்கடி ஸ்தம்பிக்கும் கரூர்.
கரூர் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் திருவிக தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கடந்த எம்.பி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே போட்டியிருந்ததால் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணியை இபிஎஸ் அமைப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (11.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சில மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது.
கரூரில் நாளை(12.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புகளுர், பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி ஆகிய துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் ஜவுளி உற்பத்தி (ம) பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் என ஏராளமான தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை மீட்டெடுக்க புதிய பேருந்து நிலையம் அமைத்து அங்கு புறநகர் பேருந்துகளை இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கரூர், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கீழ்பாகம் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில், ரஞ்சித்குமார், ராஜேஷ்குமார், அன்பு, எஸ்.கண்ணையன், ஆர்.கருப்பண்ணன்,ஆனந்தி, சினேகா, ஈஸ்வரி, நிஷாந்தினி, ஜி. நித்திஷ், மணிகண்டன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, இன்று கலைஞர் அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களைஇணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியபாலம் கடைவீதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் தூய்மை பணியாளர் ஒருவரை வெறி நாய் காலில் கடித்து விட்டு ஓடி உள்ளது. காயம் அடைந்த தூய்மை பணியாளருக்கு அருகில் இருந்தவர்கள் காலில் ரத்தம் வடிவதை துணியால் கட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் 45 வயதான நபர். இவருக்கு 42 வயதில் மனைவியும், 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கரூரில் 7 வருடமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவரது மனைவி 6 மாத கர்பிணியாக உள்ளார். இவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில், நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் மணமுடைந்த இவர் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோயில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்துவதை எதிர்த்து, கோயிலில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட நா.த.க செயலாளர் நன்மாறன், முன்னாள் வி.ஏ.ஓ. காமராஜ், பாலு, ஆனந்தன், ரஞ்சித் உள்பட, 500 பேர் மீது, வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் ஹேமலா ஹோட்டலில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 73 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துக்கொள்ள, 2030 ஆண்டுக்குள் மொத்த விற்றுமுதல் 50,000 கோடியை தொடும் வகையில் ‘KARUR VISION 2030 COLLABORTING TO ACHIVE THE BEYOND 50K’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Sorry, no posts matched your criteria.