India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி, “மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் உள்ளனர். கூடுதலாக சேலம், நாமக்கல்லில் இருந்து மருத்துவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”என்றார்.

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக, ஏராளமானோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழநதுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 6 குழ்நதைகள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழநதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் கரூர் விரைகிறார்கள்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கரூர் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து, கரூர் ஆட்சியர் தங்கவேலிடம், முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் கரூரில் இருந்து வரும் செய்தி வருத்தமளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பரப்புரையில் தள்ளமுள்ளு காரணமாக ஏராளமானோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏராளமானோர் கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பரப்புரையில் தள்ளமுள்ளு காரணமாக ஏராளமானோர் மயக்கமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூர்: பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அக்.15ஆம் தேதி நடக்கிறது. இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 15ஆம் தேதி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டி நடக்கிறது. ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி, கல்லுாரி என மொத்தம், 3 மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வரை வழங்கப்படும். அக். 14க்குள் <

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக கரூர் அருகே உள்ள நொய்யல் ரயில்வே கேட் தற்காலிகமாக செப்.26 முதல் 29ஆம் தேதி வரை
மூடப்பட்டிருக்கும். இந்தப் பாதை வழியில் செல்லும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் மாற்றுப் பாதையில் பயணம் செல்ல வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.