Karur

News September 28, 2025

BREAKING: கரூர் துயரம்.. உதவி எண்கள் அறிவிப்பு!

image

கரூரில் இன்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விவரங்களை தெரிந்து கொள்ள 04324 256306, 7010806322 என்ற அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

கரூர்:10ஆயிரம் பேருக்கு அனுமதி; மீறப்பட்டதால் துயரம்

image

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் இன்று (செப். 27) நடைபெற்ற த.வெ.க. கூட்டத்திற்கு, 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று போலீஸிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் கூட்டத்தில் மீறப்பட்டன. இதன் காரணமாக ஏற்பட்ட அதிக நெரிசல் (Stampede) காரணமாகவே இந்தத் துயரமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

News September 28, 2025

காவல்துறை கட்டுப்பாட்டில் கரூர்

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பலர் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளதால், கரூர் முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, கரூர் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

News September 28, 2025

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – விஜய்!

image

“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

News September 28, 2025

கரூரில் பாமக பொதுக்கூட்டம் ரத்து அறிவிப்பு

image

கரூரில் நாளை நடைபெறவிருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மற்றும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், பலரின் சிகிச்சையைக் கருத்தில் கொண்டு, பாமகவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகார்த்தி அறிவித்துள்ளார்.

News September 28, 2025

கரூர் முழுவதும் ஆம்புலன்ஸ் சத்தம்

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் தகரக் கொட்டாய் விழுந்ததில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திலிருந்து படுகாயமடைந்தவர்களைத் தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்கின்றன. சிகிச்சையில் குழந்தைகள் பேச்சு மூச்சின்றி இருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

News September 28, 2025

கரூர் துயரம்: பாதுகாப்பு குறைபாடு தான் காரணமா?

image

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் பாதுகாப்பு குறைபடும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறுகிய இடமான வேலுச்சாமிபுரத்தை பிரச்சாரம் செய்ய ஒத்துக்கியதோடு, விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, மின்தடை ஏற்படுத்தியதும், கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே பலர் மயக்கமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 28, 2025

தொடர்ந்து மருத்துவனைக்கு விரையும் ஆம்புலன்ஸுகள்

image

கரூர் பிரச்சார கூட்ட நெரிசளீள் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டம் முடிந்து சில மணி நேரங்கள் கடந்தும், இன்னும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸூகள் விரைந்த வண்ணம் உள்ளன. பெற்றோர் இன்றி 2 சிறுவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் அரசு மருத்துவமனை முழுவதும் அழுகுரல் கேட்டவண்ணம் உள்ளது.

News September 27, 2025

BREAKING; இரவே கரூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்!

image

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை காண முதல்வர் முக ஸ்டாலின் நாளை கரூர் வருவார் என கூறப்பட்ட நிலையில், இன்றிரவே முதல்வர் கரூர் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

News September 27, 2025

கரூரில் துயரம் – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

image

“கரூரில் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளதாகவும், மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும், அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!