India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.,க்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தவும், சம்பவம் தொடர்பாக இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வழக்குப்பதிவு செய்து, விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்று ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தநிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணராயபுரம், கீழ சிந்தலவாடியை சேர்ந்தவர் பாபு (35). இவரின் மனைவி கீதாவுடன் கடந்த 7 மாதங்களாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கீதா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றார். மன வேதனையில் நேற்று பாபு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு

கரூர் – வீரராக்கியம் இடையிலான ரயில் பாதையில், பொறியியல் துறை சார்ந்த பராமரிப்பு பணி வரும், 6ம் தேதி நடைபெறுகிறது. பாலக்காடு டவுன் – திருச்சி ரயில் பாலக்காட்டில் இருந்து புறப்படும். கரூர் ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும்.கரூர் – திருச்சி இடையே பயணிக்காது. அதேபோல் திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் மாயனூரில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
3. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,820 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் அக்.9 ஆகும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சாலையை கடக்கும் பொழுது செல்போன் பேசுவதை தவிர்ப்போம், என அறிவிப்பு செய்துள்ளனர். மேலும் சாலையை கடக்கும் பொழுது அதிக நபர்கள் அலைபேசியில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பேசிக்கொண்டே செல்கின்றனர். இதேபோல் வாகனத்திலும் செல்கின்றனர். இதை தவிர்த்து உயிரை பாதுகாத்துக் கொள்ள கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கின்றனர்.

கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சாலையை கடக்கும் பொழுது செல்போன் பேசுவதை தவிர்ப்போம், என அறிவிப்பு செய்துள்ளனர். மேலும் சாலையை கடக்கும் பொழுது அதிக நபர்கள் அலைபேசியில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பேசிக்கொண்டே செல்கின்றனர். இதேபோல் வாகனத்திலும் செல்கின்றனர். இதை தவிர்த்து உயிரை பாதுகாத்துக் கொள்ள கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (45). இவர் நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் சட்ட விரோதமாக தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் பாண்டிச்சேரி மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற வேலாயுதம்பாளையம் போலீசார் மது விற்ற அன்பழகன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் டூவீலர் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.