Karur

News March 26, 2025

கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் திருவிழா முழு விவரம்

image

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் ஏப்.3ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ▶️அதை தொடர்ந்து ஏப்., 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, ▶️9ல் திருக்கல்யாண உற்சவம் ▶️11ல் தேரோட்டம் ▶️12 ல் தீர்த்தவாரி ▶️13ல் ஆளும் பல்லாக்கு ▶️14ல் ஊஞ்சல் உற்சவம் ▶️15 ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெறும். இதை மற்ற பக்தர்களுக்கும் பகிருங்கள். 

News March 26, 2025

கரூர்: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

image

கரூர் அரசு காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (75). இவர் காந்திகிராமத்தில் நடந்து சென்றுபோது, தாந்தோணிமலையைச் சேர்ந்த வினோத் குமார் மனைவி கிரிஜா (37) ஓட்டி வந்த டூ வீலர் சீனிவாசன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தான்தோன்றி மலை போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை. 

News March 25, 2025

மார்ச் 29 ம் தேதி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

image

கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே பிளஸ்-2 பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது EMIS எண் விவரத்தினை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 25, 2025

கரூர் மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

கரூர்: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

News March 25, 2025

காணியாளம்பட்டி நிறைவு விழா நாளை நடைபெறுகிறது

image

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

ரூ.30,000 சம்பளம்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

image

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஊதியமாக மாதம் ரூ.30,000/- வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 25, 2025

செந்தில் பாலாஜிக்கு கெடு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

image

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,”அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா? என்பதை தெரிவிக்க கூறியிருந்தும் பதில் கூறாதது ஏற்புடையதல்ல;10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும். மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.

News March 25, 2025

கரூர்:பெண்ணை கொலை செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை!

image

கரூர் மாவட்டம், தென்னிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு விவசாய கூலித் தொழிலாளி பொன்னம்மாள் என்கிற தனலட்சுமி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தென்னிலை போலீசார் நடராஜ் என்பவர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நடைபெற்று வந்தநிலையில் நடராஜ் என்பவருக்கு 5 வருடம் சிறை தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2025

7 புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்த அமைச்சர்

image

கரூர்,அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை கிளைகளில் உள்ள பழைய நகரப் பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேரூந்துகளை கரூர்-கரிக்காலி, கரூர்-கோட்டநத்தம், கரூர்-மாணிக்கபும், கரூர்-கூனம்பட்டி, கரூர்-மூலனூர், குளித்தலை-நெய்தலூர் காலணி, குளித்தலை-தோகைமலை ஆகிய வழித்தடங்களுக்கான பேருந்துகளை, கலெக்டர் தங்கவேல் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

error: Content is protected !!