Karur

News November 15, 2024

கரூரில் வாக்காளர் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி செல்வோர் ஆகியோரின் வசதிக்காக கரூர் மாவட்டத்திலுள்ள 1055 வாக்குச்சாவடி மையங்களில் எதிர்வரும் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுகிழமை) ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளார்.

News November 15, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2. பசுபதிபாளையத்தில் பட்டப் பகலில் திருட்டு – திருடனுக்கு தர்ம அடி
3. கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் லாரிகள் மோதி விபத்து
4.கரூரில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அறிவிப்பு
5.அமராவதி தடுப்பணைக்கு 329 கன அடி நீர்வரத்து

News November 15, 2024

கரூரில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளர்/சுயதொழில் புரிபவர்/பொதுக்கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது பெற்றிட விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in”என்ற இணையதளத்தில் நவ.18ஆம் தேதி கடைசி நாளாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் அளித்துள்ளார்.

News November 15, 2024

கரூரில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு அறிவிப்பு

image

கரூரில் புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

இணையதளம் மோசடி காவல்துறை எச்சரிக்கை

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் Whatsapp குரூப்பில் SBI rewardz என்னும் இணையதள மோசடி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த APKயை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மேலும் இதனை நம்பி உங்கள் வங்கி கணக்கு மற்றும் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கரூர் மாவட்ட எஸ் பி பெரோஸ் கான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 14, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
3.செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
4.ராஜேந்திரத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை விழா
5.கரூர் அமராவதி தடுப்பணைக்கு 187 கன அடி நீர்வரத்து
6.உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு பேரணி

News November 14, 2024

எரிசக்தி யூனியன் மாநாடு கரூர் அமைச்சர் பங்கேற்பு

image

புதுடெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கு கொண்டு, மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால்லிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக மக்களுக்காக கரூர் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

News November 14, 2024

கரூர்: விதைகளை பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

image

கரூர் மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்த விதைகளை விதைப்பதற்காக சேமிக்கும் போது ஈரப்பதம் மற்றும் பூச்சித்தாக்குதல் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும். இடுபொருள் செலவினைக் குறைக்கவும், தங்களிடம் உள்ள விதைகளை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 ஆய்வுக்கட்டணமாக செலுத்தி கரூர் காந்திகிராமத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து பயன் அடையலாம் என கரூர் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

கரூரில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன (BC, MBC, DNC) மாணவ, மாணவிகள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Fresh and Renewal applicatios) https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes இந்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 13, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய நபர் கைது
2.கரூரில் பல்வேறு பகுதிகளில் கொட்டிதீர்த்தது கனமழை
3.தான்தோன்றி மலையில் முடி காணிக்கை மண்டபம் திறப்பு கொடுக்கப்பட்டது.
4.கரூரில் நவ 24இல் மாரத்தான் போட்டி: துவக்கி வைக்கும் அமைச்சர்
5.கரூரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது.