India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: வெண்ணமலை எம்.ஜி.ஆர் சிலை அருகே, சுமதி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதே வழியில் விஜயகுமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுமதி மீது மோதியதில், சுமதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூர்: தளவாபாளையம் அருகே கிழக்கு தவிட்டுப்பாளையம் தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). இவரது மனைவி ஜெயலட்சுமி(36) 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் புலியூர் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்காக ஆதார் அட்டையும் ரேஷன் கார்டும் கொண்டு வர வேண்டும்.

கரூர், புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நாளை (அக்டோபர் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தொழிலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் தெரிவித்தார். பொது, அறுவை, மகப்பேறு, இதய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு இலவச மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படும் என்றார்.

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!

கரூர்: குளித்தலை அருகே தோகைமலை வேதாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு அதிகப்படியான கடனால் மனவிரக்த்தியில் இருந்தவர் நேற்று முன்தினம் எலிமருந்தை சாப்பிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று(அக்.9) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் மக்களே.., எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பலரும் ஆன்லைனில் டிரெஸ் எடுப்பது வழக்கம். இந்நிலையில், நடைபெறும் பல்வேறு ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே <
Sorry, no posts matched your criteria.