India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 27 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.