Karur

News September 19, 2024

கரூரில் கொளுத்தும் வெயில்

image

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், இன்னும் சில நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

News September 19, 2024

கரூர் மாவட்டத்தில் 8171 மரக்கன்றுகள்: கலெக்டர் தகவல்

image

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் 8171 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, மற்றும் இதர சமூக அமைப்புகள் மூலம் 4100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

கரூரில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, பொதுமக்களிடம் இருந்து 19 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

News September 18, 2024

கரூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது பாய்ந்தது போக்சோ

image

கரூர்: அரவக்குறிச்சி வெஞ்சமாங் கூடலுார் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (26). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்ததாண்டு திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் சமூக நல அலுவலர் பூர்ணம் கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், கார்த்திக் ராஜா மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News September 18, 2024

பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

கரூரில் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் விருது பெற குழந்தையின் பெயர் தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் குழந்தை ஆற்றிய வீரதீர செயல் ஆகியவற்றை ஆதாரங்களை வருகிற 30-ம்தேதி வரை (https:// awards.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்ற அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

கரூர் கலெக்டர் முக்கிய தகவல்

image

கரூர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் செப்.22ல் 8,171 மரகன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் தோட்டக்கலைத் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இதர சமூக அமைப்புகளை கொண்டு 4,100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

போலீஸ் உத்தரவை மதிக்காத மினி பஸ் டிரைவர்கள்

image

கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பல இடங்களில் நிறுத்தி பயணியரை டிரைவர்கள் எற்றி செல்கின்றனர். இதனால் மினி பஸ்களை ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்தகூடாது என்று போலிசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அதை மீறி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து பயணிகள் அவதி அடைகின்றனர்.

News September 17, 2024

நாளை இலவச மருத்துவ முகாம்

image

புகலூர் காகித ஆலை சார்பில் 296வது இலவச மருத்துவ முகாம் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை முகாம் நடக்கிறது. டாக்டர்கள் சுகந்தி, மாலதி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர். இலவச மருத்துவ முகாமை சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 17, 2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம்: கலெக்டர்

image

கரூர் மாவட்டத்தில் நாளை (18.09.2024) (புதன்கிழமை) கலெக்டர் தங்கவேல் தலைமையில் “உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாம்” நடைபெற உள்ளது. இது தொடர்பாக 10.09.2024 முதல் கரூர் வட்டத்தில் உள்ள கரூர், வெள்ளியணை, தோரணக்கல்பட்டி ஆகிய 3 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தகவல் கொடுத்துள்ளார்.

News September 17, 2024

கரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

கரூர் ஜவஹர் பஜார், உழவர் சந்தை, பேருந்து நிலையம், திண்ணப்பா கார்னர், மனோகரா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதையை சிலர் கடைகளை அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர். .இதனையடுத்த நேற்று அதிகாரிகள், ஊழியர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.