India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே நாமக்கல் பகுதி சேர்ந்த ரமேஷ் என்பவர் கரூர் டு திருச்சி சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காரை ஓரமாக நிறுத்திய அவர் அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி புகார் கொடுத்ததன் அடிப்படையில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விக்கான தேசிய மையம் சார்பில் பிப்ரவரி 28ஆம் தேதி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அடகு கடை தொழில் தொடர்பான தங்கம் மற்றும் வெள்ளியின் தரம் பார்க்கும் 5 நாட்கள் பயிற்சி துவங்க உள்ளது. எனவே இந்த வாய்பை பயன்படுத்தி தொழில் துவங்கவும் & வேலை வாய்ப்பு பெறவும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும் முன்பதிவு செய்ய இந்த நம்பருக்கு 98849 68920 / 87544 83083 தொடர்பு கொள்ளலாம்
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
கரூர், தோரணக்கல்பட்டி அருகே பண்டுகாரன் புதூரைச் சேர்ந்தவர் அருக்காணி (90). இவருக்கு மூச்சிரைப்பு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி வழக்கமான மாத்திரைகளுக்கு பதிலாக அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு மயங்கியுள்ளார். அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாந்தோணிமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
அரவக்குறிச்சி கொடையூர் கிராமம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (67). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மலர்க்கொடி நேற்று ஐந்து ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வடக்கு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் மலர்க்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு கரூரில் (22/02/2025) அன்று பழைய அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கான வயதுவரம்பு 19 முதல் 30 வரை இருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கான தகுதி பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி படித்திருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7397724819 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
க.பரமத்தி திருக்காடுதுறை பகுதி லோகநாதன் (35). அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் . திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் லோகநாதன் அவரது தாயார் 2 பேர் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பெரம்பலூருக்கும், கரூர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் இசைவாணி திருச்சிக்கும், குட்கா வியாபாரிகள் தொடர்பு வெங்கமேடு இன்ஸ்பெக்டர் மாயனூருக்கும், நகை காணாமல் போன வழக்கில் இளம் பெண்ணிடம் புகைப்படம் அனுப்ப சொல்லி வாட்ஸ் அப்பில் பேசிய வெங்கமேடு இன்ஸ்பெக்டர் அறந்தாங்கிக்கும் மாற்றப்பட்டனர். இதுபோல் 32 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 21ம் தேதி காலை 10 – 2 வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55912 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கரூர் கலெக்டர் தங்கவேல் அறிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.