Karur

News May 16, 2024

கரூர் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் அரசு வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சேர்க்கைக்கு நடைபெறுகிறது. இந்த https://skilltraining. tn. gov. in/DET/ எனற இணைய தளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பங்கள் கடைசி நாள் (07.06.24). மேலும் கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை (04324-222111, 9499055711) என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாக & நேரில் தொடர்பு கொள்ள என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

கரூர்: அடுத்த 5 நாட்களுக்கு மழை

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கரூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News May 16, 2024

கரூர் அய்யர் மலை சிறப்புகள்

image

கரூரில் அமைந்துள்ளது சோதிவடிமான அய்யர் மலை. இந்த மலைமீது இரத்னகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. புராணக்கதைகளைக் கொண்ட இத்தலத்தில் அப்பர் பாடல் பாடியுள்ளார். தேவாரத்தில் சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவதலமாக இது உள்ளது. இத்தலத்தின் சிவனின் முன்பு பொயுவாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது. 1140 படிகளுடன் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது.

News May 16, 2024

அரவக்குறிச்சி அருகே வேன் விபத்தில் இருவர் பலி

image

அரவக்குறிச்சி, தடாகோவில் அருகே நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமாரின் குடும்பத்தினர் நேற்று(மே 15) ராமேஸ்வரம் சென்று திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பெயர் பலகை மீது மோதியது. இதில் துரைசாமி(74), ஷாலினி(33) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

கரூரில் கந்து வட்டி கொடுத்தால் குண்டர் சட்டம் பாயும்

image

கரூரில் சட்டவிரோத கந்துவட்டி வசூல் செய்தால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார். இதில், முறையாக பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் மக்களுக்கு அதிக பணம் கொடுத்து வசூல் செய்து துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

News May 15, 2024

கரூரில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருநங்கைகள் 

image

கரூர் சமத்துவபுரம் காந்தி நகரை சேர்ந்த சுகுமார் (44) நேற்று முன்தினம் லாரி மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவடியான் கோவில் தெருவில் வசித்து வரும் திருநங்கைகள் சுகுமாரிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் திருநங்கைகளும் சுகுமாரை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து டவுன் போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

கரூரில் காப்போம் திட்டம் – 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

image

தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

அனுமதி தரக்கூடாது – கரூர் எஸ்.பி உத்தரவு

image

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வின்போது ஓட்டுனர் வருகை இல்லாத, முதலுதவி பெட்டியை சரியாக பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என எஸ்.பி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

News May 14, 2024

தனியார் ஹோட்டலில் கேஸ் சிலிண்டரில் கசிவு

image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மட வளாகம் பகுதியில் செயல்படும் தனியார் ஹோட்டலில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கடை உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை வெளியே எடுத்து வைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்பட இருந்தது தவிர்க்கப்பட்டது.

News May 14, 2024

கரூர் அருகே விபத்து

image

கரூர் திருக்காட்டுத்துறையை சேர்ந்தவர் சிவகுமார் 30. இவர் கடந்த மே 11ம் தேதி தனது எலக்ட்ரிக் பைக்கில் கரூர் சேலம் சாலையில் வந்துள்ளார். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் ஒட்டி வந்த ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். 

error: Content is protected !!