Karur

News September 24, 2024

கரூரில் மாபெரும் புத்தக கண்காட்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டம் பிரேம் மஹாலில் 3.10.2024 முதல்13.10.2024 வரை மாபெரும் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற உள்ளது என்று கரூர் ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். இந்த புத்தக கண்காட்சியில் இலக்கிய நூல்கள், வரலாறு சம்பந்தப்பட்ட நூல்கள், வேலைவாய்ப்பு நூல்கள், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், டாக்டர் அப்துல் கலாம் இவர்களின் நூல்களும் இன்னும் பல முக்கியமான நூல்களும் இடம் பெறுகின்றன.

News September 24, 2024

கரூரில் உரிமம் பெற பதிவு செய்யலாம்

image

தீபாவளி பண்டிகை (31.10.2024) அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே மாவட்ட வருவாய் அலுவலரிடம், தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.600/- ஐ IFHRMS என்ற இணைய வழியில் (Online) இ-சேவை மையத்தின் மூலமாகவோ, பொது சேவை மைய மூலமாக செலுத்தி பதிவு செய்யலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார்.

News September 24, 2024

கரூரில் கலை போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

image

கலை பண்பாட்டுத் துறை, திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பில், கரூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதிப்பிரிவுகளில் கலைப்போட்டிகள் (குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) எதிர்வரும் 29.09.2024 அன்று காலை கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

குடும்ப பிரச்சனை – தலைமை காவலர் தற்கொலை

image

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தனது அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News September 23, 2024

EX படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

image

கரூரில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டத்தில் தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் வாரிசுதாரர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பில் 60% விழுக்காடுகளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெயிலில் காத்திருப்பு

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வருகை புரிந்தனர். பின்னர், மனுக்களை வழங்குவதற்கு நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்தனர். மேலும், பலர் வெயிலில் நிற்க முடியாமல் கீழே தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.

News September 23, 2024

கரூரில் பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

image

கரூர்: குளித்தலை அடுத்த டி.இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணகிரி (58). இவரது மனைவி பாப்பம்மாள் (52) நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கிருந்த பாம்பு அவரை கடித்தது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பம்மாள் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கருணகிரி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 23, 2024

கரூரில் பயிற்சி டாக்டருக்கு பாலியல் தொல்லை

image

கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 25 வயது பெண் டாக்டர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே கல்லுாரியில் பணிபுரியும் 45 வயது அறுவை சிகிச்சை உதவி மருத்துவர் சில நாட்களுக்கு முன், பாலியல் தொல்லை கொடுத்ததாக, பயிற்சி டாக்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, விசாகா கமிட்டியினர் விசாரித்து வருகின்றனர்.

News September 22, 2024

சட்ட விரோதமாக கஞ்சா விற்ற 2 பேர் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலணி மற்றும் சிவன் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் கஞ்சா விற்பனை செய்த கார்த்திகேயன் (23). லோகேஷ் (22) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 22, 2024

கொடகனாறு தடுப்பணை நீர்நிலை மட்ட நிலவரம்

image

கரூர் மாவட்டம் கொடகனாறு தடுப்பணையில் இன்றைய நீர்நிலை மட்டம் நீர்வளத்துறை அறிவிப்பு 22.09.2024
காலை 06.00 மணிவரை FRL உயரம்: 27.00 கன அடி உள்ளது.
முழு கொள்ளளவு: 434 Mcft, தற்போதைய நீர்மட்டம் : 649.80 அடி (198.200) மீ, அணையின் நீர்மட்ட ஆழம் : 19.85 அடி, முன் சேமிப்பு: 198.37 mcft தண்ணீர் வரத்து ஏதும் இல்லை. விவசாயத்திற்காக தண்ணீர் வெளியேற்றம் இல்லை.