Karur

News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 23, 2025

கரூர்: அரசு பேருந்தில் பிரச்னையா? உடனே கூப்பிடுங்க!

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!

News April 23, 2025

கரூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

மனைவியிடம் பழகிய நபருக்கு அரிவாள் வெட்டு!

image

குளித்தலை அருகே பொய்யாமணி புலவர் புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (55) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவரின் மனைவி ரம்யாவுடன் கடந்த சில வருடங்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராவணன் செந்தில்குமாரை அரிவாளால் தலையில் வெட்டி காயம் ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2025

கரூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 22, 2025

அய்யர்மலை சித்திரை திருவிழாவுக்கு வாங்க

image

குளித்தலை வட்டம் அய்யர்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ▶️ மே.1ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ▶️ மே.5 சுவாமி திருக்கல்யாணம் ▶️ மே.8 சுவாமி குதிரை தேர் ▶️ மே.9 திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி ▶️ மே.14 இரவு மஞ்சள் நீராட்டு விழா சுவாமி குதிரை வாகனம் நடைபெறவுள்ளது. இதனை மற்ற பக்தர்களுக்கும் பகிருங்கள்.

News April 22, 2025

எஸ்.ஐ. கனவை நனவாக்குங்கள் கரூரில் இலவச பயிற்சி வகுப்பு

image

கரூர் மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.04.2025 முதல் நடத்தப்படவுள்ளது. மேலும் <>TNUSRB.TN.GOV.IN <<>>என்ற இணையதளத்தில் 03.05.25 வரை பதிவு செய்யலாம் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி தேர்விற்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 22, 2025

கரூர் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக்கோங்க!

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .இதற்கு தங்களுடைய சுயவிவர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 21, 2025

ரூ 46 லட்சம் மோசடி தம்பதியினர் மீது வழக்கு பதிவு

image

மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோர்ந்த சண்முகசுந்தரம் (40) மனைவி சசிகலா(38) தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று அதற்கு வட்டி கட்டவில்லை. இதில் நிதி நிறுவனம் மேலாளர் வீரமணி (39) வட்டியோடு சேர்த்து ரூ 46.21 லட்சம் கட்ட வேண்டும் அதற்கு தம்பதியினர் செலுத்த முடியாது என தெரிவித்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசில் மேலாளர் அளித்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!