India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கைத்தறி நெசவு பூங்கா அமைய உள்ளதாக சங்கத் தலைவா் பழனிச்சாமி நேற்று அறிவித்தார். அவர் அளித்த பேட்டியில் கரூா் தற்போது வீட்டு உபயோக துணி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதற்கு கைத்தறி தொழில்தான் காரணம். எனவே கைத்தறிக்கு பயன்படுத்திய கருவிகள் உட்பட அனைத்தையும் சுக்காலியூா் தேசிய நெடுஞ்சாலை அருகே தயாராகி வரும் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கரூர் 110 கி.வோ து.மி.நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை 18 நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் காமராஜபுரம், செங்குந்தபுரம், ஜவஹர்பஜார், திருமாநிலையூர், காந்திநகர், ரத்தினம்சாலை, வடிவேல்நகர், ராமனுஜம்நகர், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் 22 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய நான் டிரான்ஸ்னபில் சர்டிபிகேட் மூலம் பத்திர பதிவு செய்துள்ளார். இது போன்ற சர்டிபிகேட் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் நான் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். சர்டிபிகேட் கொடுத்தது உண்மைதான் என கண்டுபிடிக்கப்பட்டு சிபிசிஐடி துறையினர் கைது செய்தனர்.

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <

கரூர் சின்னதாராபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் தலைமை பேச்சாளர்கள் சாம்ஸ் கனி, திலீபன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, அவதுாறாக பேசியுள்ளனர். இதையடுத்து எஸ்.ஐ. மகாமுனி கொடுத்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீசார் இருவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தரமற்ற பணிகள் செய்த ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க கூறி, அப்பகுதியில் வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வித்தியாசமான முறையில் அளித்தார். புகார் மனுவில் சுகாதார நிலையம் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் பாதை இவைகளில் ஊழல் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கரூரில் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜய பாஸ்கர் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கேரளாவில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய கண்டனத்தை சமூக வலைதளங்களிலும், எக்ஸ் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.