Karur

News October 2, 2024

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து 9 மனுக்களை பெற்று, அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News October 2, 2024

தீபாவளி சிறப்பு விற்பனை ஆட்சியர் துவக்கி வைப்பு

image

தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள கதர் கிராப்ட் நிறுவனத்தில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த ஆண்டு 176 லட்சம் மதிப்புள்ள கதர் பாலிஸ்டர் பட்டு மற்றும் உள்ளன்ராயங்களை விற்பனை செய்திட வாரியத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 2, 2024

கரூர் உழவர் சந்தையின் காய்கறி விபரங்கள்

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை: தக்காளி ரூ.50, வெங்காயம் ரூ.65, பச்சை மிளகாய் ரூ.30, இஞ்சி ரூ.160, கத்தரிக்காய் ரூ.35, பாகற்காய் ரூ.30, சுரக்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.20, பச்ச அவரை ரூ.90, பரங்கிக்காய் ரூ.20, மாங்காய் ரூ.120, புடலங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.15, கருவேப்பிலை ரூ.60, புதினா ரூ.70, கொத்தமல்லி ரூ.85, ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

News October 2, 2024

இன்று கிராம சபை கூட்டம்

image

(அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டங்களை நடத்த கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், பொது நிதி செலவினம் குறித்த விவாதம், தணிக்கை அறிக்கை, குழந்தை தொழிலாளர்கள் இல்லாத பஞ்சாயத்துகளை உருவாக்குதல் உள்ளிட்டவை தொடர்பான விவாதங்கள் கூட்டத்தில் வைக்கப்படுகின்றன.

News October 1, 2024

கரூரில் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம்

image

கரூர் ஜவகர் பஜாரில் இன்று சிஐடியு சார்பில், சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை கோரி, செப்டம்பர் 9ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ததற்கு ஆதரவாக மற்றும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தலையிட வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 1, 2024

கரூரில் நாளை மறுநாள் புத்தக திருவிழா

image

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் கரூர் பிரேம் மஹாலில் வரும் 3 மாலை, 4.00 மணிக்கு புத்தக திருவிழா தொடங்குறது.இதை மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் தங்கவேல் , எம்.பிக்கள் ஜோதிமணி, அருண் நேரு, எம்.எல்.ஏக்கள், மேயர், துணைமேயர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த ஏற்பாடுகளை, கரூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

News October 1, 2024

அரசு மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

image

கரூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும். மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

கரூரில் கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் (02.10.2024) காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்தார். இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய கோரிக்கை மனுக்களைஅளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News September 30, 2024

முதலிடம் பிடித்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

image

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி தர்ஷனா, வடிவமைத்த பட்டு சேலை, நவ நாகரிக ஆடை வடிவமைப்புத் துறையில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. இதையடுத்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழ்த்து தெரிவித்து ரொக்கப் பரிசு வழங்கினார். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அம்மாணவியை பாராட்டி கெளரவித்தார்.

News September 30, 2024

கரூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்

image

கரூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 5 பஞ்சாயத்துக்களில் 72.30 ச.கி.மீ பரப்பளவு இணைக்கப்பட உள்ளதாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.ஏமூர், மேலாப்பாளையம், புலீயூர் போன்ற 3 பஞ்சாயத்துகளை தவீர்த்து ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்தூர், கருப்பம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருமாநிலையூர் போன்ற 5 பஞ்சாயத்துகள் மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ளது.