India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் தேதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வேலாயுதம்பாளையம், புகளூர், தவிட்டுப் பாளையம், வாங்கல், நெரூர், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடுவர். இதுமட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபடுவர். பாதுகாப்பு கருதி அப்பகுதிகளில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூரில் காவிரி ஆற்றில் அதிகப்படியான நீர்திறக்கப்பட்டு வரும் நிலையில், ஆடி பதினெட்டு மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு எதிர்வரும் 03.08.24 மற்றும் 04.08.24 ஆகிய தேதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், குளிப்பது, புகைப்படங்கள் எடுப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி சத்துணவு மைய சமையலர்களின் சிறுதானிய சமையல் போட்டியை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தழிழரசி ஆகியோர் உள்ளனர்.

கரூர், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட தரகம்பட்டி சமுதாயக்கூடத்தில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் துவங்கி வைத்து நேரில் பார்வையிட்டார். பிறகு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். உடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

கரூரில், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டங்களில், கட்டளை, ரெங்கநாதபுரம், மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோயில் மற்றும் திம்மாச்சிபுரம் தோனி அம்மன் கோயில் உள்ளிட்ட காவிரிக்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் தங்கவேல் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். புகழூர் தவிட்டுப்பாளையம், குளித்தலை கே.பேட்டை, ஆகிய இடங்களில் முகாம்கள் தயார்நிலையில் உள்ளது என்றார்.

மேட்டூர் அணைக்கு தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேல் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. விரைவில் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், எனவே காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கரூர் கலெக்டருக்கு மேட்டூர் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சி தீர்மானத்தில் அமைச்சர் ‘செந்தில்பாலாஜி’ எனப் பெயர் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தெருவிளக்கு வைக்கக் கோரி வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ‘மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின்படி’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கரூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.35 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இன்று கலெக்டர் தெரிவித்தார். நடப்பாண்டில் கரூர் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் விவரம் தெரிந்தவர்கள் யாருக்கேனும் விவரம் தெரியாவிட்டால் அருகாமையில் உள்ளவருக்கு தகவல் தெரிவித்து அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
Sorry, no posts matched your criteria.