Karur

News August 16, 2024

கரூரில் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

image

கரூரில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு “SEED” அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அணுக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 16, 2024

கரூரில் திருக்குறள் போட்டி- ஆட்சியர் அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 1330 திருக்குறள் ஒப்பிவிக்கும் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பத்தை (https://tamilvalarchithurai. tn. gov. in) என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News August 16, 2024

கரூரில் நாளை பேச்சுப்போட்டி

image

கரூரில், திண்ணப்பா தியேட்டர் அருகில் ஆர்த்தி அழகம்மை மஹாலில் நாளை காலை 9 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேச்சு போட்டி நடைபெறுகிறது. என்றென்றும் ஈ.வெ.ரா ஏன்?, அண்ணாதுரை கண்ட மாநில சுயாட்சி, கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 16, 2024

கரூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.

News August 15, 2024

கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

image

கரூர் மாவட்ட சுகாதார மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 பணியிடங்கள். இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன விருப்பமுள்ளவர்கள் 24ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு https//karur.nic.in/ என்ற இணையத்தில் அனுகவும்.

News August 15, 2024

கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை மக்களுக்கு அறிவிப்பு

image

கரூர் மாவட்ட பொது மக்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள் அரசு அலுவலகங்களில் தங்கள் கொடுக்கும் மனுக்கள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.தொடர்புக்கு எஸ்.பி-9498105830, 9443015982 இன்ஸ்பெக்டர்கள்- 9498105762, 9498171737 புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

கரூரில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

error: Content is protected !!