Karur

News August 19, 2024

கரூர்: ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

image

குளித்தலை அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது அக்கா புஷ்பா சேப்பளப்பட்டியில் வசித்து வருகிறார். புஷ்பா நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் கொழுந்தனாரின் மகன் சஞ்சித் (9) ஆகியோருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ராஜேந்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சஞ்சித் தண்ணீரில் மூழ்கி உயிரிசந்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 19, 2024

கரூர்: அதிக வட்டி கேட்டு மிரட்டியவர் கைது

image

கரூர்: முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் திருவேங்கடம் என்பவரிடம் ரூ.3.50 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால், திருவேங்கடம் அதிக வட்டி கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுவரை ரூ.28 லட்சம் வரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலவிடுதடி போலீசில் ரவி அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்துள்ளனர்.

News August 18, 2024

கரூர் மாவட்ட தலைப்பு செய்திகள்

image

1-கரூர் மாநகராட்சி வசூல் என்ற பெயரில் சுங்க கட்டணம் வசூல்
2-கரூரில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்
3-குளித்தலை அருகே 9 வயது சிறுவன் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
4-கரூர் டைமண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு குறித்து மாராத்தான் போட்டி

News August 18, 2024

கரூர் மாநகராட்சியில் வசூல் வேட்டை

image

கரூர் மாநகராட்சி வசூல் என்ற பெயரில் சுங்க கட்டணம் வசூல் ராயனூர் பகுதியில் உள்ள வாடகை கடையில் இறைச்சிக்கடை வைத்திருக்கும் கடைகளுக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். மேலும், இது நகராட்சி மூலமாக டெண்டர் விடப்பட்டு வசூலிக்கப்படுகிறதா அல்லது தனிப்பட்ட நபர் இத்தகைய செயல்களை செய்து வருகின்றனரா என்று வணிகர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

News August 18, 2024

வாய்க்காலில் கிடந்த கணவன் உடல்: கரூர் அருகே அதிர்ச்சி

image

கரூர்: ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமியை காணவில்லை என அவரது மனைவி ஜெயா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஜெயா புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சின்ன தாராபுரம் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் உடல் மீட்கப்பட்டது. அது காணாமல் போன பொன்னுசாமி என்பது தெரியவந்தது.

News August 18, 2024

கரூர் அசைவ பிரியர்களின் கவனத்திற்கு

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அசைவ பிரியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோழிக்கறி கடையில் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு வாங்கவும். உயிர் எடை ஒரு கிலோவுக்கு ரூ.200, தோலுடன் ஒரு கிலோ ரூ.220, தோல் உரித்தது ஒரு கிலோ ரூ.240க்கு விற்பனை ஆகிறது. மட்டன் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனை செய்யப்படுகிறது.

News August 18, 2024

கரூரில் வீட்டின் நூலகங்களுக்கு விருது

image

கரூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் தங்களது நூல் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருந்தால், அதன் விவரத்துடன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள், நூல்கள் மாவட்ட மைய நூலகம், கரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04324-263550 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

News August 18, 2024

கரூர்: பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் மீது வழக்கு

image

கரூர்: பரமத்தி வேலூரை சேர்ந்த விஜய் (26) என்பவர், 39 வயது பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 17, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 17, 2024

கரூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்” என்ற தவறான தகவல் பரவி வருகிறது. மேற்படி தகவலை நம்பவேண்டாம். மேலும் இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ. தங்கவேல், தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!