Karur

News August 22, 2024

கரூர்: 2 பெண்கள் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு

image

கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். இந்நிலையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக கூறி 2 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மீது சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 22, 2024

கரூர்: பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர்: 2 நாட்கள் விடுமுறை

image

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தையொட்டி மண்ணிற்குள் செல்லும் கூட்டு குடிநீர் குழாயில் நேற்று தீடிரென உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளி வளாகத்திற்குள் முழுவதுமாக நிரம்பியது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் வரை நேற்று மற்றும் இன்று (22.08.2024) ஆகிய 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2024

கரூரில் 3 பேர் மீது போக்சோவில் வழக்கு

image

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராம்பிரசாத் (24) என்பவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராம்பிரசாத் உள்பட 3 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 21, 2024

BREAKING கரூரை துரத்தும் மழை

image

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவிலிருந்து காலை வரை கனமழை பெய்துள்ளது.

News August 21, 2024

கரூரில் மின்தடை அறிவிப்பு

image

கரூரில் மின்பராமரிப்பு காரணமாக நாளை (ஆக.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 முதல் மதியம் 3 மணிவரை: ஜெகதாபி, பாலப்பட்டி, சுண்டு குளிப்பட்டி, விராலிப்பட்டி, லந்தக்கோட்டை, முத்துரங்கன்பட்டி, காளையபட்டி, வரவனை, வீரியபட்டி, வில்வமரத்துப்பட்டி, மேலப்பகுதி. காலை 9 முதல் 2 மணிவரை: சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், செல்லறபாளையம் காவலர் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News August 20, 2024

பாலியல் தொல்லை: கரூர் திமுக பிரமுகர் கைது

image

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (33). இவர் திமுக கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் சிலம்பரசன் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இன்று கைது செய்துள்ளனர்.

News August 20, 2024

முதலமைச்சர் கோப்பை: பதிவு செய்ய கடைசி நாள்

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு போட்டியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி நாள் 25.8.2024.

News August 20, 2024

கரூரில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

கரூர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கரூர் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 114 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

கரூரில் இரண்டு வாலிபர்கள் கைது

image

கரூர்: பள்ளப்பட்டி அருகே மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பள்ளபட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேன் ஒன்றில், 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக சதாம் உசேன், கவியரசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், வேனையும் பறிமுதல் செய்தனர்.

News August 19, 2024

கரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை கரூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

error: Content is protected !!