Karur

News August 26, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

மைசூரு- செங்கோட்டைக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி செப் 4, 7ஆம் தேதி இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். நாமக்கல்லுக்கு 6.38 மணி, கரூருக்கு காலை 7.10-க்கு வந்து விடும். செங்கோட்டையில் இருந்து செப்.5, 8 ஆம் தேதிகளில் 7.45-க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30-க்கு செல்லும்.

News August 26, 2024

கரூரில் விளையாட்டுப் போட்டிகள்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான ஆக.29ஆம் நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி (ம) பொதுப்பிரிவு ஆண், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வரும் 29ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

News August 25, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டுப் போட்டிகள் 29.08.2024 அன்று காலை 8.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்வார்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 25, 2024

கரூரில் பென்சனர் குறைதீர் கூட்டம்

image

கரூர்: மணவாடி லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில், பிஎஃப் உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (27/8/24 ) நடைபெறுகிறது. கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனர் கமிஷனர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார்

News August 25, 2024

கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

image

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2024

கரூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

image

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2024

கரூரில் ஆக்.,18 வரை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி கடந்த 20ல் தொடங்கி வரும் அக்., 18 வரை நடக்கிறது. இப்பணி ஓட்டுசாவடி நிலை அலுவலரால் மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் தகவல் அளித்தார்.

News August 23, 2024

கரூரில் சாதனை படைத்த பள்ளி மாணவிகள்

image

கரூர்: தாந்தோணிமலையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 17, 19 வயதிற்கான கபடி, எறிப்பந்து போட்டி மற்றும் 14 வயதிற்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும் பெற்று நேற்று சாதனை படைத்தனர்.

News August 23, 2024

கரூரில் 2 பெண்களை தாக்கிய நபர் கைது

image

கரூர்: சிந்தாமணிப்பட்டி தரகம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது கணவர் கண்ணன் என்பவர் வீட்டிற்கு வந்து மனைவியும், மாமியாரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர்.

News August 23, 2024

கரூர்: கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

image

கரூர்: தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகளில்‌ 250க்கும்‌ மேற்பட்ட கிராமங்கள்‌ உள்ளன. இங்கு திருட்டு, போதை பொருட்களை கடத்தல், வெளியூர்‌ ரவுடிகள்‌ நடமாடுவது உள்ளிட்ட குற்றங்கள் நடந்து வருகிறது. இவற்றை தடுக்க 23 ஊராட்சிகளில்‌ முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தோகைமலை போலீசார் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ முக்கிய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

error: Content is protected !!