Karur

News August 28, 2024

மக்கள் தொடர்பு முகாம்

image

கரூர், அரவக்குறிச்சி தாலுகா கூடலூர் கிராமத்தில் உள்ள செல்வக்குமார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணி அளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த குறித்த தகவலை கரூர் மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News August 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் (30-08-2024) அன்று வெள்ளிக்கிழமை 11 மணியளவில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளனர். இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அறிவித்துள்ளனர்.

News August 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் (30-08-2024) அன்று வெள்ளிக்கிழமை 11 மணியளவில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளனர். இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அறிவித்துள்ளனர்.

News August 28, 2024

கரூரில் நாளை விளையாட்டுப் போட்டிகள்

image

கரூர் கலெக்டர் தங்கவேல் செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான ஆக.29ஆம் நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி (ம) பொதுப்பிரிவு ஆண், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க நாளை 29ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

News August 27, 2024

கோ-கோ போட்டி: கரூர் மாணவிகள் தேர்வு

image

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவிகளான ஆதீஸ்வரி,யுவஸ்ரீ, ஆகியோர் தமிழ்நாடு கோ-கோ சங்கம் அனுமதியுடன், தேனி மாவட்டத்தில் பெண்களுக்கான மாநில அளவிலான ஜூனியர் கோ-கோ போட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குனர், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 27, 2024

30 பேருக்கு விருது வழங்கிய கலெக்டர்

image

கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைஞர்களுக்கு விருதுகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். இதில் கராத்தே, பரதநாட்டியம், நாடகம் தவில், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

News August 27, 2024

கரூர் மாணவிக்கு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இடம் 

image

கரூர், குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியம் நாடக்காப்பட்டி கருப்பசாமி மகள் புனிதலட்சுமி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் 627 மதிப்பெண் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் மாநில அளவில் 14 வது இடமும் கரூர் மாவட்டம் அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.

News August 27, 2024

இன்று மின்தடை இல்லை

image

கரூரில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக மின்தடை ரத்து செய்யப்பட்டது. அதன்படி, குளித்தலை கோட்டத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும், பணிக்கம்பட்டி, நச்சலூர், அய்யர்மலை, மாயனூர், பஞ்சப்பட்டி, சிந்தாமணிப்பட்டி,  பாலவிடுதி, தோகைமலை ஆகிய துணை மின்நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யவில்லை என அறிவித்துள்ளனர்.

News August 26, 2024

கரூர் டூ சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

image

கரூர் மாநகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து செல்கிறது, மூன்று தொழில்களை கொண்ட மாவட்டமாக கரூர் விளங்கி வரும் நிலையில் சென்னைக்கு செல்வதற்கு திருச்சி, சேலம் பகுதிகளுக்கு சென்று சென்னை செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News August 26, 2024

வெள்ளியணை அருகே 3 பேர் கைது

image

கரூர் அடுத்த பாகநத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆவத்திபாளையம் முருகேசன், கந்தன், அசோகன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!