India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் அருகேயுள்ள டீக்கடையில் விற்ற வடையில் எலி இருப்பதாக எலக்ட்ரிஷன் கார்த்திக் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் எலி வடையை சாப்பிட்ட அவர் வாந்தி, மயக்கம் காரணமாக குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர், முன்னாள் அமைச்சர், சகோதரர் 100 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி வாங்கியதாக குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் புகார் l அளித்திருந்தார். இது தொடர்பாக எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கூறி எம்ஆர்விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 05.09.2024 அன்று கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், இன்று (30-08-2024) வெள்ளிக்கிழமை 11 மணியளவில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர்: வெள்ளியணை சூர்யா நகரில் சிமென்ட் சாலை பணிகள் நடந்து வருகிறது. அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதனுக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால், சாலை போட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவருக்கும் வெள்ளியணை பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிவக்குமார், லோகநாதனை தாக்கியதாக தெரிகிறது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புகழூரில் அரவக்குறிச்சி குறுவட்டு அளவிலான தடகளப்போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ரெனோவா ரெக்ஸ் வட்டெறிதல் மற்றும் குண்டெறிதலில் பங்கேற்று 2ம் இடம் பிடித்து, மாவட்ட அளவிலான தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து சாதனை படைத்த மாணவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை உடற்கல்வி இயக்குநர் கதிர்வேல் வழங்கினார்.

கரூர் மாவட்ட வேளாண் துறை சார்பாக நாளை 10 மணி அளவில் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பழுதுகளைக் கண்டறிதல் உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உழவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகள் அறிந்து பயிற்சி பெறலாம் என செயற்பொறியாளர் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

கரூர்: வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திமுக நிர்வாகி லோகநாதன் தனக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால் சாலை போட வேண்டாம் என ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது வெள்ளியணை ஊராட்சி து.தலைவர் சிவக்குமார், லோகநாதனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில், லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்தனர்.

கரூரில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்தின் பிறந்தநாளான ஆக.29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி (ம) பொதுப்பிரிவு ஆண், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க இன்று 29ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் போன்ற ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கரூரில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.