India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளை 03.09.2024, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூபாய் 52,00,000 மதிப்புள்ள 211 செல் போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் இழந்த ரூபாய் 67,00,000/- மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கொடுக்க உள்ளார். இது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நீரில் மூழ்கி இறந்த நபர்களின் வாரிசு தாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித் துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நில மோசாடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை – முசிறியை இணைக்கும் பெரியார் காவிரி பாலத்தில் இன்று 2 சரக்கு லாரிகள் ஓரப்பகுதியில் மோதியது. இதில் ஒரு லாரியின் முகப்பு முற்றிலும் சேதமானது. அதில் வந்த ஓட்டுனர் சிவநாராயணனுக்கு கை, காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றொரு லாரியின் ஆக்ஸில் கட்டானது. இதில் அந்த லாரியின் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வெங்கமேடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது என்.எஸ்.கே. நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த சஞ்ஜித் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தோகைமலை அடுத்த கள்ளை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவர், நீட் தேர்வில் தமிழ் வழி பாடத்திட்டத்தின் கீழ் 7.5 இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்று, மாநிலத்தில் 15வது இடமும், மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பெற்று சாதனை படைத்தார். அவருக்கு சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேற்று ஹரிஹரனை பாராட்டி வாழ்த்தினார்.

கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2024 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு (06.09.2024) அன்று கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.

குளித்தலை: வைகை நல்லூர் அக்ரஹாரம் பிரிவு சாலையில் பாபு என்பவரின் டீ கடையில் நேற்று கார்த்தி என்பவர் மசால் வடை சாப்பிட்டுள்ளார். பாதி சாப்பிட்டு விட்டு பார்த்தபோது, அதில் எலி இறந்து கிடந்தது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. பாதிக்கப்பட்ட கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பரமத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் டீ கடையில் சோதனையிட்டு கடைக்கு சீல் வைத்தார்.

குளித்தலை: கள்ளை கிராமத்தை சேர்ந்த ராமசாமி – சிறும்பாயி தம்பதியர் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவரது மகன் ஹரிஹரன் நீட் தேர்வில், தமிழ் வழி பாடத்திட்டத்தின் கீழ், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 627 மதிப்பெண்களை பெற்று, மாநில அளவில், 15வது இடமும், மாவட்ட அளவில் 2வது இடமும் பெற்றார். இவருக்கு சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்து, மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.

கரூர் மனோகரா கார்னர் அருகே இன்று காலை பழனிச்சாமி கைது செய்து அவர் எடுத்து வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. அவரிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஷ்கான் அப்துல்லா பாராட்டுகளை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.