India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கலை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வழங்கினார்கள். இதில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி வேட்பாளர் தங்கவேல் கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியில் உள்ள உறியடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நேற்று பங்குனி மாத சனிக்கிழமையையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கரூரில் மருத்துவர் கருப்பையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர், குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டியில் உள்ள 5-ஆவது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து பணிக்கம்பட்டி சந்தை நான்கு ரோடு பகுதியில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கரூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தொடர்ந்து 2வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை எதிர்த்து ஜோதிமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் செந்தில்நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன மக்களே?
கரூர் மக்களவை பொதுத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் பொது தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஏடிஎம் நிரப்ப சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரகுமார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.