India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகாசினி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் சுகாசினி மற்றும் கிருஷ்ணராவ் ஆகியோர் நெப்போலியனை தகாத வார்த்தையால் திட்டி கம்பால் அடித்துள்ளனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.
கரூர் மேட்டுத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. இதில் தினமும் காலையில் பல்லக்கும், மாலையில் சிம்ம வாகனம், வெள்ளி கருட, சேஷ, யானை, கருட, குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் புலியூர், எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே மாநகராட்சி மண்டலம் 3-க்கு விநியோகிக்கப்படும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வார்டு எண் 15, 16, 38, 39, 40, 41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் கால தாமதம் ஏற்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி அடுத்து மணல்மேடு டெக்ஸ் பார்க் அருகே KTPL பெண்கள் விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரைப்பெர்ரி தர்சுலி (26) தங்கி வேலை பார்த்தார். இவர் காய்ச்சல் சளி காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று கரூரில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கரூரில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூரில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 19-ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துப் பணியாளர்களும் வாக்களிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு இன்று மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியே வந்த Renauld Triber என்ற வாகனத்தை சோதனை செய்ததில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் கிராமம், கட்டளை மேடு பகுதியை சேர்ந்த அருண்குமாரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1,10,400 பறிமுதல் செய்தனர்.
பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருபவர் மணிகண்டன்(26). இவர் நேற்று முன்தினம், பள்ளப்பட்டி மேற்கு தெருவில் பழுதை நீக்குவதற்காக, மின்மாற்றியில் ஏறி பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மத்திய மாநில் அரசுகளிடம் உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகளின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர் அதிகாரிகள் என மாணவ, மாணவிகளை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, அவர்கள் அனுப்பும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய சொல்லி பணத்தை பறித்துள்ளனர். இந்நிலையில், உதவித்தொகை சம்மந்தமாக எந்த ஒரு அதிகாரியும் போனில் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
கரூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திட, குடிநீர் பிரச்சனைகள், நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் கொண்டுவர இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.