Karur

News April 27, 2024

தூய்மை பணியாளர்கள் ஊழியர் சங்கம் ஆட்சியருக்கு கோரிக்கை

image

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சியில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது வெப்ப அலை வீச்சு காரணமாக, 110 டிகிரி முதல் 115 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதை பதை பார்த்து வருகிறோம். எனவே வேலை நேரத்தை மாற்றி தருமாறு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 27, 2024

சின்ன தாராபுரத்தில் பாஜக மாவட்ட தலைவர் மீது போலீசார் வழக்கு

image

கரூர் சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் கைதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வி.ஏ.ஓ.அகிலா கொடுத்த புகார்படி மாவட்ட தலைவர், உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சின்னதாராபுரம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

கரூரில் கோடைகால பயிற்சி முகாம்

image

கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் விளையாட்டு அரங்கில் ஏப்.29ஆம் தேதி முதல் மே.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஜூடோ, வளைகோல்பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர், மாணவர் அல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

கரூர்: அதிகப்படியான வெப்ப அலை இருக்கும்

image

கரூர் மாவட்டத்தில் மே ஒன்றாம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது எனவும் கூறியுள்ளது.

News April 27, 2024

கரூர் : லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

image

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுருளிராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் வேலுச்சாமிபுரத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்த கரூர் மாநகர போலீசார் லாட்டரி விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 5 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1500 பறிமுதல் செய்துள்ளனர்.

News April 27, 2024

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கரூர், பரமத்தியில் நேற்று (ஏப்.26) 105.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கரூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கரூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

கரூர்: குப்பை மேட்டில் பச்சிளம் குழந்தை சடலம்

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் எதிரே உள்ள குப்பை மேட்டில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த வடசேரி விஏஓ கணேசன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று(ஏப்.26) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2024

கரூர் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

கரூரில் நேற்று (ஏப்.25) 106.7 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் கரூரில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

News April 26, 2024

அரவக்குறிச்சி: நீதிபதி முன்பு தற்கொலை முயற்சி!

image

அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவருக்கு விடுப்பு மற்றும் 2 மாதம் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நடராஜன் நேற்று(ஏப்.25) நீதிபதி சந்தோஷம் பணியில் இருந்தபோது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News April 25, 2024

கரூர்: மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை

image

கரூர் ஜெகதாபியில் மாரியப்பனுக்கும், அவரது தந்தை மாணிக்கத்துக்கும் வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரனை வரவழைத்து, மாரியப்பனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதில் மாரியப்பன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், மாணிக்கத்தை இன்று கைது செய்தனர். மேலும், கொலையை மறைக்க விபத்தில் மகன் இறந்தது போல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.

error: Content is protected !!