India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி தர்ஷனா, வடிவமைத்த பட்டு சேலை, நவ நாகரிக ஆடை வடிவமைப்புத் துறையில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. இதையடுத்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழ்த்து தெரிவித்து ரொக்கப் பரிசு வழங்கினார். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அம்மாணவியை பாராட்டி கெளரவித்தார்.

கரூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 5 பஞ்சாயத்துக்களில் 72.30 ச.கி.மீ பரப்பளவு இணைக்கப்பட உள்ளதாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.ஏமூர், மேலாப்பாளையம், புலீயூர் போன்ற 3 பஞ்சாயத்துகளை தவீர்த்து ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்தூர், கருப்பம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருமாநிலையூர் போன்ற 5 பஞ்சாயத்துகள் மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இலக்கா இலாத அமைச்சராக செயல்பட்டார. அதை அடுத்து அதை ராஜினமா செய்தார். பிறகு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அடுத்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு மின்சார துறை அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட இருக்கிறது.

கரூர் காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்தவர் ஜீவா (19). நிதி நிறுவன ஊழியர். இவர் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். அதில் 7 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் ஒருவரையும் எஸ்.பி பரிந்துரைபடி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறுசிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ2,100 கோடி கடன் வழங்கபடும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜா அறிவித்தார்.அதில் கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி.துறையில் தலா 500 பேருக்கு வேலையளிக்க, புதிய மினி டைட்டல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கரூரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் இணையவழி தளத்தில் https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் படிவம் ஒய்ல் பதிவுக்கட்டணம் ரூ.100-ஐ செலுத்தி 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கள்ளப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு அட்டைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி மீது கார் மோதி உள்ளது. இதில் காரின் முன் பக்கம் மற்றும் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. காரில் பயணித்த நபர்கள் எந்த காயங்கள் இன்றி உயிர்த்தப்பினர். லாலாபேட்டை போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து விசாரணை செய்கின்றனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள Ex.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதுகுறித்து கரூர் எம்.பி ஜோதிமணி தனது X தளத்தில், 15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எவ்வளவோ கடினமான நாட்கள், துயரம், தனிமை என எல்லாவற்றையும் தனது அசைக்க முடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள செந்தில் பாலாஜிக்கு எனது அன்பும், வாழ்த்துக்கள் என்றார்.

மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். முன்னதாக, ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்கள் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு அளித்தார். இந்த வழக்கில் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டி வரும் 29ஆம் தேதி நடக்க இருப்பதால், போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளியில் வரும் 29ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆதார் கார்டு நகலுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 8754999088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.