India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர், திருமாநிலையூரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபா என்பவரின் கணவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி தனது மனைவியின் தோழி ரம்யாவின் உறவினர்களை பழிதீர்க்க கூலிப்படையை தயார் செய்திருந்தார். அதுகுறித்து தகவலறிந்த தான்தோன்றிமலை போலீசார் ராமசுப்பிரமணி அளித்த தகவலின் அடிப்படையில், கூலிப்படையை சேர்ந்த 6 பேரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.

கரூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 5 கடைகளுக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். கரூரில் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 5 கடைகளுக்கு நேற்று காலை அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbkarur.net என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

கரூர் குமரன் உயர் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவன் திவ்யேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட ஸஃபி மல்யுத்தம் மாநில போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய ஸஃபி மல்யுத்தம் போட்டியில் தமிழக அணியின் சார்பாக கலந்து கொள்கிறார்.

கரூர்: பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த (04.09.24) அன்று பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய வீரமலை என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வீரமலையை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கரூர் உழவர் சந்தை பகுதியில் சிவக்குமார் (34) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் அருகே ராயனுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நகுலேஷ்வரி (30), கனிஷ்டா ராணி (44), சேலத்தை சேர்ந்த சந்திரமோகன் (31) ஆகியோர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1,100 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகார்படி கரூர் டவுன் போலீசார் விசாரித்து, நகுலேஷ்வரி உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர்.

கரூரில் வேளாண் விவசாயிகளுக்கு உட்கட்டமைப்பு நிதித்திட்டம் குறித்து https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ddab.karur1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்). கரூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து,வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் 19.10.2024 அன்று காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை, தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாளை ( 9/10/24) காலை 10.30 மணி அளவில் ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு 04324-294335,7339057073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.