Karur

News May 7, 2025

கடன் தீர்க்கும் மத்தியபுரீஸ்வரர்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசியில் மத்தியபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை தரிசனம் செய்தால், காசியை தரிசித்ததற்கு சமமாம். மேலும், நீண்ட நாள்களாக கடன் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள் இங்கு வந்து சுவாமிக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபட்டால் அப் பிரச்னை தீரும் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 7, 2025

மூன்று பேர் பலி- செந்தில் பாலாஜி இரங்கல்

image

கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி பதிவில், கரூர், ஜோதிவடம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.மழலைகளை இழந்து வாடும் பிரபு ,மதுமதி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

News May 7, 2025

கொல்கத்தா தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த மூன்று பேர் பலி

image

கரூர் உப்பிடமங்கலம் ஜோதிவடம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு தனது குடும்பத்துடன் நேற்று கொல்கத்தாவில் உள்ள தனியார் ஓட்டலில் சுற்றுலாவுக்காக தங்கியுள்ளார். அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பிரபுவின் மாமனார் முத்துகிருஷ்ணன் (61), மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தியா (10), ரிதன் (3) ஆகிய மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 

News May 7, 2025

தோகைமலை  அம்மனுக்கு 5.75 லட்சம் ரூபாய் அலங்காரம்

image

தோகைமலை அருகே கொசூரில் உள்ள விநாயகர், குள்ளாயிஅம்மன் மற்றும் பாம்பலம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகின்றது. 16 வகையான திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து குள்ளாயி அம்மனுக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில்  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News May 7, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

கரூர்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 30, 2025

கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

image

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2025

குழந்தை வரம் தரும் நரசிம்மபுரீஸ்வரர் கோயில்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பத்தூரின் நரசிம்மபுரீஸ்வரர் கோயிலில் ஓர் சிறப்பு வழிபாடு உண்டு. இங்குள்ள மகாலட்சுமிக்கு பூசுமஞ்சளை பக்தர்கள் சாத்துவது வழக்கம். அந்த மஞ்சளை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவர்கள் அதை அரைத்து குளித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 29, 2025

கரூர் அரசு உதவித் திட்ட எண்கள்

image

▶️ உதவி திட்ட இயக்குநர்: 7373704218
▶️ செயற்பொறியாளர்: 7373704578
▶️ உதவித் திட்ட அலுவலர்(ஊதியம்&வேலைவாய்ப்பு) : 7402607682
▶️ உதவித் திட்ட அலுவலர்(வீடுகள்&சுகாதாரம்): 7402607681
▶️ உதவித் திட்ட அலுவலர்: 7402607679
▶️ கண்காணிப்பாளர்: 7402607688
▶️ வட்டார வளர்ச்சி அலுவலர்: 7402607715

News April 29, 2025

 92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் 

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. ஈசநத்தம் ஊராட்சியில் உள்ள 25 குக் கிராமங்களுக்கு அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்துள்ளனர். மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

News April 29, 2025

கரூரில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது

image

கரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மது விற்க உரிமம் பெற்ற ஓட்டல்களில் வரும் மே 1-ஆம் தேதி அன்று மே தினம் மற்றும் உழைப்பாளர் தினம் என்பதால் மது விற்பனை நடைபெறாது. மீறி யாரேனும் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!