Karur

News October 29, 2024

கரூரில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பதைத் தொடர்ந்து, ஒருமைப்பாட்டு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நேற்று வாசித்து, அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இதில் வருவாய் துறை அலுவலர், திட்ட இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

கரூரில் கனமழை பெய்ய வாய்ப்பு!

image

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் நவ.3-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நவ.1-ம் தேதி 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 28, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1. குளித்தலையில் அடைத்து வைத்த நடைபாதை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
2. கிருஷ்ணாபுரம் பகுதியில்தெரு நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
3.கரூரில் போலீசாரை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
4.தாந்தோணிமலை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
5.மேலகம்பேஸ்வரம் வழியாக கொசூர் செல்ல புதிய வழித்தடத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

News October 28, 2024

தெரு நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் மஞ்சமேடு தெருவைச் சேர்ந்த ரத்தினம் அவரது மனைவி முக்கி என்பவர் ஆடுகளை இரவு நேரத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிர் இழந்தன. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில வீடுகளில் ஆடுகளைக் கோழிகள் மற்றும் சிறுவர்களை கடித்து விட்டதால் மக்கள் அச்சம் அடைகின்றனர். பல முறை இது குறித்த புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.

News October 28, 2024

கரூரில் போலீசாரை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியல்

image

கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முதல் தலைமை தபால் நிலையம் வரை தரைக்கடைகள் அமைக்க கூடாது என அறிவுறுத்திருந்த நிலையில், நேற்று அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றினர். போலீசாரைக் கண்டித்து நேற்று வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து மாவட்ட சிஐடியு சார்பில் இன்று தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.மாயனூர் கதவணைக்கு 7635 கனஅடி நீர் வரத்து.
2. பஞ்சமாதேவி கிராமத்தில் அக்.29ஆம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
3.புகழூரில் “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும், தன்னார்வலர்களுக்கு விருது.
4.குளித்தலை ரயில்வே நிர்வாகம் வேலி போட்டு அடைத்ததால் பொதுமக்கள் அவதி.
5.குளித்தலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது.

News October 27, 2024

கரூரில் அருளும் அகஸ்தீஸ்வரர்

image

கரூர் மாவட்டம், சோமூர் அருகே திருமுக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் ஆகும். சோழ வம்சத்தைச் சார்ந்த முதலாம் ராஜேந்திர சோழனால் 1500 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் கட்டப்பட்டதாகவும், அகத்திய முனிவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் கருதப்படுகிறது. உங்கள் ஊரின் அருகில் உள்ள புகழ்பெற்ற இடங்களை கமெண்ட் பண்ணுங்க.

News October 27, 2024

பஞ்சமாதேவியில் மனுநீதி நாள் முகாம்

image

கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் அக்.29ஆம் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு அரசுத் துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்கள் துறை சார்பான நலத்திட்ட உதவிகளை பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். பஞ்சமாதாவி கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த மனுநீதி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

கரூர் மாணவனுக்கு அமைச்சர் பாராட்டு

image

ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி அக்.3 முதல் 6ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. சஞ்சீவ் , பயிற்சியாளர் சென்சாய், தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர். சஞ்சீவ் சண்டை பிரிவில் 2 இடம், கட்டா பிரிவில் 3 இடத்தில் வெற்றி பெற்றார். கியூகுஷின்ரியூ உலகப் போட்டி வரலாற்றில் பரிசு பெற்ற முதல் இந்தியர் இவராவார். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவர் மற்றும் பயிற்சியாளருக்கு வாழ்த்துகளை கூறினார்.

News October 27, 2024

கரூர்: இன்று ரேஷன் கடை செயல்படும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!