India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். SHARE IT

1. கரூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
2.கரூரில் மழை கடும் பனிப்பொழிவால் அவரை விலை உயர்வு
3.நொய்யல்லில் நிலக்கடலை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
4. கரூரில் தீபாவளி பண்டிகையொட்டி வெல்லம் விலை உயர்வு
5.கரூர் சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்,தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம்.

கரூர் மாவட்டத்தில் 2025 வாக்காளர் பட்டியலில் 4 தொகுதிகளில் வாக்காளர்கள் விவரம், அரவக்குறிச்சிமொத்த வாக்காளர்கள்- 2,10,970, பூத்,253,கரூர்மொத்த வாக்காளர்கள்-2,40,170, பூத் ,270, கிருஷ்ணராயபுரம்மொத்த வாக்காளர்கள்-2,11,069, பூத்,260,குளித்தலை மொத்த வாக்காளர்கள்- 2,27,064, பூத், 274, என கரூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 8,89,273, மொத்த பூத்-1,055 என தொகுதி வாரியாக வாக்காளர்கள் கணக்கிடப்பட்டுள்ளது

கரூர் மாவட்டம் புது காளியம்மன் கோவில் காமராஜரை சேர்ந்தவர் செல்வராஜ் 54, இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் நேற்று மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து செல்வராஜை கரூர் டவுன் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கானிடம், கரூர் மேற்கு மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது, மாநில இணை செயலாளர் கணேசன், அண்ணா தொழிற்சங்க மத்திய நகர செயலாளர் ஓம் சக்தி சேகர் ஆகியோர் இருந்தனர்.

க.பரமத்தி, நொய்யல் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து, கரும்பு ஆலைகளுக்கு விற்கின்றனர். இதிலிருந்து ஆலை உரிமையாளர்கள் தயாரித்த வெல்லம், இன்று சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. அப்போது, 30 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1500க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1650க்கும் விற்பனையானது. தற்போது பண்டிகை காலம் என்பதால் வெல்லம் விலை உயர்வு என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கரூர் சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்,தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம். இப்பணி தற்காலிகமானது, ஒப்பந்த அடிப்படையிலானது. ரூ.12000 ஊதியம் வழங்கப்படும்.10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு முதுநிலை தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி, கணினி பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை கரூர் சமூக நல அலுவலகத்தில் நவ.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

1. கரூரில் 2025 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
2. திருநெல்வேலி ஆட்சியரை கண்டித்து கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. கரூரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் – இரண்டு பேர் படுகாயம்.
4. நத்தமேடு கருமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு.
5.சுக்காலியூர் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் 2025-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்களை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

கரூர் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் தன்னிச்சையான அதிகாரப் போக்கினை கண்டித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 25ஆம் தேதி முதல் கட்ட ஆர்ப்பாட்டம் இன்று மோகன்ராஜ் சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்றது சுமார் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.