India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.கரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
3.வெள்ளியணையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
4.கரூர் மாவட்டத்தில் 25 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவானது.
5.இணுங்கூர் விதைப்பண்ணையில் வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வாங்கல் ஆகிய இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என இன்று வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

மாநில யூத் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்கு கரூர் மாவட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்ட கையுந்து பந்து சங்க புரவலர் விஎன்சி பாஸ்கர், இன்டிகுஷ் பெயிண்ட் நிறுவனம் சார்பில் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. அவற்றை விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் வழங்கி வாழ்த்தினார். இதில் கையுந்து பந்து துணைத்தலைவர் சரண், செயலாளர் முகமது கமாலுதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

1.க.பரமத்தியில் 10.60 மில்லி மீட்டர் மழை பதிவு ஆனது.
2.அமராவதி தடுப்பணையின் நீர் நிலை மட்டம் நீர் இருப்பு 3772.35 டி.எம்.சி.யாக உள்ளது.
3.தான்தோன்றிமலை வெளுத்து வாங்கிய கனமழை
4.கரூர் மாநகராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பை அகற்றும் பணி தீவிரம்
5.மாயனூர் கதவணைக்கு 13,433 கனஅடி நீர் வரத்து
6. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

கரூர் மாநகராட்சி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கரூரில் இருந்து சேலம், மதுரை, திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையில் குறுக்கிடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரூரில் குழந்தை, முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்,பெண்கள் குழந்தைகள் விடுதிகள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். பதிவு பெறாமல் செயல்படும் இல்லங்கள் பதிவு செய்ய விண்ணப்பிக்க 1 மாத அவகாசம் வழங்கப்படுகிறது. தவறினால் இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என கரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

1. கரூரில் பூக்களின் விலை உயர்வு
2. முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு
3. பசுபதி ஈஸ்வரன் கோயிலில் வானவேடிக்கை நிகழ்வு
4. தரகம்பட்டியில் தாசில்தாருடன் வாக்குவாதம்
5. கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
6. மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
7. கரூர் எம்.பி தீபாவளி வாழ்த்து

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று (31.10.2024) மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திரு உருவ சிலைக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சேலத்தில் இருந்து கரூர் வழியாக செல்லும்போது, அதிமுக சார்பில் முன்னாள் அமையச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.