India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாடத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பரமத்தியில் வெப்ப அளவு 104.36 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
கரூரில் அதிமுக வேட்பாளரை அழைத்து வராமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் தாம்பூல தட்டுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு, தலா 50 ரூபாயை அதிமுகவினர் வழங்கினர். நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் 50 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அதிமுகவினரிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் எம்.பி தொகுதிக்குப்பட்ட கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். வழியெங்கும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் இன்று காலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கருப்பையா வாக்காளர்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூரில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 62 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. அதில், 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியதில், தமிழ்நாட்டில் மக்கள் மோடி ஆட்சிக்கு எதிராக கொலை வெறியாக உள்ளனர். இப்போது 5 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி, மக்கள் கஷ்டப்படும் போது ஏன் வரவில்லை. எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது என்றார்.
கரூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 62 வேட்பாளர்கள் 67 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் வேட்பாளர் தங்கவேல் 3 வேட்பு மனுக்களையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 2 வேட்பு மனுக்களையும் அதே நாளில் தாக்கல் செய்தனர். இன்று மட்டும் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனுவை ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வழங்கினார். இதில் வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு சரி பார்த்து உறுதிமொழி வாசகத்தை கொடுத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி மற்றும் தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.