India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1804 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1429 பேரும் என மொத்தம் 3323 வாக்காளர்கள் வீட்டிலிருந்தே தபால் மூலம் 12d படிவம் பெற்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் வாக்களிக்க ஏதுவாக 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அஞ்சல் வாக்குகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 8 வாக்குச்சாவடகள் மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
கரூர் புகலூர் அருகே பொன்னியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுந்தரி. இவர் சேமங்கி பகுதிக்கு சென்றபோது அவரது மாமா மோட்டார் சைக்கிளை விக்னேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இது குறித்து கேட்ட போது வாக்குவாதம் முற்றி விக்னேஷ் குமார், ரவி, இந்திரா, முனியம்மாள், சத்யா 5 பேரும் சுந்தரியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகாரில் வேலாயுதம்பாளையம் போலீசார் 5 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு சின்னரெட்டிப்பட்டி சுங்கசாவடியில் சோதனையில் ஈடுபட்டனர். தோஸ்த் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1,25,000 திண்டுக்கல் மாவட்டம், சிறங்காட்டுப்பட்டி , கோசுகுறிச்சி, கிழக்கு தெரு என்ற முகவரியை சேர்ந்த ஜமால்முகமது என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 (வி.ஏ.ஓ.) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் 64 பேரும், குளித்தலை முழுநேர கிளை நூலகத்தில் 30 பேரும், கிருஷ்ணராயபுரம் முழுநேர கிளை நூலகத்தில் 19 பேரும். அரவக்குறிச்சி முழுநேர கிளை நூலகத்தில் 8 பேரும், தோகை மலை ஊர்ப்புற நூலகத்தில் 10 பேரும் என 131 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகலூர் அருகே நொய்யல் பகுதியில் காய்ச்சல் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
கரூர் மாவட்டம் புகலூர் அருகே வேலாயுதம்பாளையம் காவல் நிலைய பகுதியில் போலீசார் நேற்று(ஏப்.,2) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னச்சத்திரம் அறிய பெரிய ரங்கபாளையத்தைச் சேர்ந்த வளர்மதி என்பவர் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கோபால் மகன் தினேஷ் என்பவர் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து வாழைக்காய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Sorry, no posts matched your criteria.