India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்

கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப்பணியிட நேர்முகத் தேர்வுக்கு அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார். தகுதியானவர்களுக்கு வரும் டிசம்பர் 2 முதல் 8 வரை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு https://drbkarur.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

அரவக்குறிச்சியில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்” நாளை (20.11.24) நடக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் இம்முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று (19.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், எஸ்வெள்ளாளபட்டி, செங்குந்தபுரம், கேவிபி நகர், மணவாசி, உப்பிடமங்கலம் ஆகிய பகுதியில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

1.கரூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
2.கரூர் பாமக சார்பில் மாவட்ட தலைவர் நியமனம்
3.கரூரில் பூச்சி தாக்கத்தால் முருங்கை வரத்து குறைவு
4.அமராவதி தடுப்பணைக்கு 1217 கனஅடி நீர் வரத்து
5. இரு தரப்பினரிடையே நிலப்பிரச்சனை: 12 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

கரூர், அரவக்குறிச்சி வட்டத்தில் அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி ஆகிய மூன்று குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் மேலும் பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை கொடுக்கவும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக தமிழ்மணி-க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் பரிந்துரை பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவராக தமிழ்மணி அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு செய்தி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் இன்று (18.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கரூரில் வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, தாந்தோணிமலை, கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், ஆமூர், ஆச்சிமங்கலம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.