India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் வரும் 23.11.2024 அன்று காலை 7:00 மணி முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சிகளின் நடக்க இருக்கும் பொது பணிகள், சாலை வசதி திட்டம், உயர் கல்வி, மகளிர் சுய உதவி குழு கடன் தொகைகள் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

➤கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ➤அதானி நிறுவனத்துடன் தொடர்பில்லை: அமைச்சர் பேட்டி ➤அரவக்குறிச்சியில் குடகனாறு வெள்ள அபாய எச்சரிக்கை ➤கரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ➤கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு ➤கரூர் அருகே வழிப்பறி: மூவர் கைது ➤குத்துச்சண்டை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் ➤குளித்தலையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு அணையின் நீர்மட்டம் 26 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோரம் இருக்கும் அரவக்குறிச்சி, கூம்பூர், ஈசநத்தம், ஆர்.வெள்ளோடு, திருக்கோர்ணம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மூன்றாம் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இத்தகவலை குடகனாறு அணை பிரிவின் உதவி பொறியாளர் மகேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு வரும் நவ 23ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம் தூய்மை பாரத திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25ம் தேதி கேஸ் ஏஜென்சி மற்றும் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ தலைமையில் நடைபெற உள்ளது. கேஸ் சிலிண்டர் வழங்குவதில் குறைபாடு ஏஜென்சி மெத்தன போக்கு உள்ளிட்ட குறைகளை நுகர்வோர்கள் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தை சேர்ந்தவர் குணசேகரன் (33). இவர் கடந்த, 18 இரவு கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் அமர்ந்திருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (21) மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போன், ரூ.1,500 பணத்தினை பறித்து சென்றனர். இதுகுறித்து, அவர் அளித்த புகார்படி, 3 பேரை கரூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கரூர் மாயனூர் அருகே தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி தேடி குழந்தையை சடலமாக மீட்டனர்.

கரூர் மாநகராட்சியில் உள்ள சிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன், மல்யுத்த போட்டியில் 100 கிலோ பிரிவில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி தலைமையாசிரியரிடம் சான்றிதழ் காண்பித்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றார். உடன் விளையாட்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்துள்ள தமிழ்சோலையை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மகன் ரோகித் ஷர்மா(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தார் அப்போது. மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1.கரூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கரூரில் நூல் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து
3.க.பரமத்தி அரசுப்பள்ளி கட்டுமான பணிகள் – கலெக்டர் ஆய்வு
4.ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு வெளியீடு
5.புலியூர் அருகே டூவிலர் மோதி ஒருவர் படுகாயம்
Sorry, no posts matched your criteria.