Karur

News November 26, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூரில் CMஐ கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
2.குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட அனைத்து கட்சியினர்
3.கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் TNROA வேலைநிறுத்தம்
4.அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்: 34 பேர் கைது
5.பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி இருவருக்கு மாவு கட்டு

News November 26, 2024

கரூர்: நெற்பயிர் காப்பீடு கடைசி நாள்

image

கரூர் மாவட்டத்தில் சாம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30க்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். பதிவு செய்யும்போது விண்ணப்பத்துடன் நடப்பு சாகுபடி அடங்கல், பேங்க் பாஸ்புக் நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து, பிரீமியம் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

கரூரில் மின்தடை அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சப்பட்டி, பாலவிடுதி, கோசூர், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பணிக்கம்பட்டி, வல்லம், நாச்சலூர், தோகமலை, அய்யர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News November 25, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூரில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
2.மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
3.மாயனூர் கதவணைக்கு வரும் 1659 கன அடி நீர்
4.கரூர்: சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
5.தேங்காய் விலை இரு மடங்காக உயர்வு

News November 25, 2024

கரூரில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் இன்று (25.11.2024) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்பகல் 4 மணியளவில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

கரூர்: ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலை

image

கரூர் அருகே, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி. சாலையை இணைக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டது. ரயில்வே குகை வழிப்பாதையில் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில்வே குகை வழிப்பாதையில் நடந்துகூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆட்சி மாறியும் காட்சி மாறாத அவல நிலையாக தொடர்கின்றது.

News November 25, 2024

கரூர்: சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

image

குளித்தலை அருகே ஆர்.டி.மலையை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சண்முகம் (21); எலக்ட்ரீஷியன். இவர் 2022 ஜூலையில் 15 வயதுடைய சிறுமியை, புதுக்கோட்டை, விராலிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். தற்போது, 8 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் மகளிர் போலீசார் சண்முகம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 24, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து வார்டுகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2.கரூர் விஷன் 2030 கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
3.உப்பிடமங்கலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
4.புகையிலை விற்றவர் கைது: 240 கிராம் பறிமுதல்
5.கரூரில் மாபெரும் மராத்தான்: செந்தில் பாலாஜி துவக்கிவைப்பு

News November 24, 2024

கரூரில் புகழ்பெற்ற மலை புகழிமலை

image

புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூரில் இருந்து 17கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மலை சிறப்பை COMMENT பண்ணுங்க மக்களே..

News November 24, 2024

மாயனூர் கதவணைக்கு வரும் 1871 கன அடி நீர்

image

மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 1871 கன அடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 651 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 500 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீரும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அணைக்கு சில நாட்களாகவே 3000 கன அடி நீர் குறைவாக வருகிறது.

error: Content is protected !!