Karur

News May 6, 2024

12 ஆம் இடம் பிடித்த கரூர் மாவட்டம்

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கரூர் மாவட்டத்தில் 95.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் கரூர் மாவட்டம் 12 ஆம் இடம் பிடித்துள்ளது என கரூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

News May 6, 2024

கரூர்: 12ஆம் வகுப்பு தேர்வு – 95.90% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி 95.90% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.08 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 97.40 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

கணவரால் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் மனைவி மீனாட்சி (44). இவரின் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மனவிரக்தியில் இருந்த மீனாட்சி வீட்டில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை.

News May 6, 2024

+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

image

கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

பாதயாத்திரை சென்ற நபர் மீது பைக் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரெத்தினம் பிள்ளை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் செல்வகுமார் (16). இவர் நேற்று கட்டாரிப்பட்டி சாலையில் பாதயாத்திரை ஆக நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

News May 5, 2024

2 கார்கள் நேருக்கு நேர் மோதல்

image

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முருளை காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ராணியுடன் காரில் வைரமடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கரூர் அமராவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

News May 5, 2024

செயற்கையாக பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்

image

பள்ளப்பட்டி குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி முனியராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று மாம்பழம் மற்றும் வாழைப்பழ குடோன்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சந்தைப்பேட்டை பகுதி பழக் குடோன்களில் மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 40 கிலோ மாம்பழங்கள், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்து உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

News May 4, 2024

கரூரில் மூதாட்டி தீயிட்டு தற்கொலை

image

கரூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மனைவி அனுசுயா (84). இவருக்கு கடந்த 2 மாதங்களாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் பூரண குணமடையவில்லை என மனம் உடைந்து காணப்பட்டவர் நேற்று மதியம் வீட்டில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 4, 2024

கரூர் : லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா தேவசிங்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் மகன் நாகராஜன் (55) இவர் தனது வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News May 4, 2024

கரூர் புகழிமலை சிறப்பு!

image

கரூர் மாவட்டத்தின் புகழூரில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் அமைந்துள்ளது புகழிமலை. இதை ஆரம்பத்தில் ஆறு கிராமங்களுக்குச் சொந்தமாக இருந்ததால் இதை ‘ஆறு நாட்டார் மலை’ என்றும் அழைப்பதுண்டு. 315 படிகட்டுகள் கொண்ட இம்மலையின் மீது முருகன் கோவில் உள்ளது. இங்கு வேலாயுதனாக காட்சித் தருகிறார். இங்கு மலைக்காவல் அய்யநாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இதற்கும் மேல் சிறிய குகையில் சிவன் பார்வதி சன்னதி உள்ளது.

error: Content is protected !!