India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வைட்டமின் “A” குறைப்பாட்டினால் கண்பார்வை இழப்பு, வளர்ச்சி குறைபாடு, ஏற்படும். இதனை தடுக்கும் விதமாக 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கரூரில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12.03.25) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 12 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம் அரசு காலனியில் அதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட MGR இளைஞர் அணி சார்பில், வருகின்ற 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் 14-ம் ஆண்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடைபெறுகிறது. அதுசமயம் போட்டில் கலந்து கொள்வார்கள் கட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாந்தோணி மலை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளை சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ பனி நாடுனர்கள் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு எம்.பி செ.ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.
கரூர் ராயனூரில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 25 மெட்ரிக் டன் குளிர்பதனக் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் பழங்கள், காய்கறிகள், உலர் பொருட்கள் போன்ற வேளாண் விளை பொருட்களை வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வம் கரூர் மாரியம்மன்.இங்கு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகத்துடன் சற்றே ஈசான்ய பார்வையில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இங்கு வழிபட்டால் அம்மை, உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணமற் போன பொருள்கள், வியாபார சிக்கல் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு பயிர் கடன்களை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் இதுவரை 2,644 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1,28,853 விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
‘தென் திருப்பதி’ என அழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி மாசி மகத்தேர் மற்றும் தெப்ப திருவிழா கடந்த 2ந்தேதி தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக கோயிலின் முன்பு தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனையடுத்து வருகிற 14-ந்தேதி தெப்ப தேர் திருவிழா நடக்கிறது. இதை ஷேர் செய்யுங்கள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கீழபஞ்சபூரைச் சேர்ந்தவர் சரண் (20). இவர் தனது நண்பர் அபர்நாத் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு குளித்தலை அருகே மருதூர் பிரிவு சாலையில் வந்துள்ளார். அப்போது எதிரே தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சரண் பலியானார். அபர்நாத் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்று குளித்தலை நகராட்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு வழங்கினார். உடன் நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜன் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.