Karur

News October 25, 2024

கால்நடை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

image

21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை இன்று முதல் மேற்கொள்ள உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக கரூர் மாவட்டத்தில் 3,78,121 குடியிருப்புகளில் இக்கணக்கெடுப்பை நடத்த 118 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 24 கால்நடை மேற்பார்வையாளர்களைக் கொண்டு கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு துல்லியமான விபரங்களை அளித்திட வேண்டும்.

News October 24, 2024

ஓவிய போட்டி வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கல்

image

கரூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற ‘சமூகத்தில் காவல்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் மற்றும் மகளிர் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News October 24, 2024

ஹேக்கர்கள் பிடியில் சிக்கிய மின்வாரிய ஊடக வாட்ஸ்அப் குழு 

image

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய குழுவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் லோகோவை பதிவிட்டு, ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை கண்டவுடன் செய்தியாளர்கள் சார்பில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினருக்கும் தெரிவித்ததை அடுத்து மின்வாரிய வாட்ஸ்அப் குழுவானது ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

News October 24, 2024

இன்றும் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News October 23, 2024

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.10.2024) அன்று பிற்பகல் 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

கரூர்: பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம், க.பரமத்தி, மேல குளத்து பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (70). இவர் கடந்த 19ஆம் தேதி தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News October 23, 2024

கரூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 1200 ஹெக்டர் பரப்பில் ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பத்திர நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் https://tnhorticulture.tn.gov.in:8080 விண்ணப்பித்து பயன் பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 23, 2024

தொழில் செய்ய ரூ.1கோடி வரை கடன்

image

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / ராணுவபணியின் போது மரணமடைந்த வீரர்களின் மனைவிகள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும். எனவே விருப்ப விண்ணப்பத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் அக்.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

தாளப்பட்டி முருகன் கோவில் தேய்பிறை சஷ்டி வழிபாடு

image

கரூர் மாவட்டம் தாளப்பட்டி பகுதியில் உள்ள கிராமத்தில் முருகன் கோவிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் ,விபூதி, கரும்புச்சாறு சீயக்காய் போன்ற மூலிகை பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு , முருகனுக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்தபின்னர் தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News October 22, 2024

கரூரில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து நாளை ஆய்வுக் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர்  வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மற்றும் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.