India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், மற்றும் ஜேசிஐ சார்பில் நாளை கொங்கு திருமண மண்டபத்தில் பாரம்பரிய வேளாண் திருவிழா நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 1500 பாரம்பரிய நெல் ரகங்கள், 300க்கும் மேற்பட்ட காய்கறி, பழ வகைகள், விதைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இயற்கை அங்காடிகள் இடம் பெற உள்ளன. மேலும் இதில் விவசாய வல்லுநர்கள் பங்கேற்று அறிவுரை வழங்க உள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணிச்சலான மற்றும் வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனாசாவ்லா விருது தமிழக அரசு சார்பில் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு தகுதியானோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து, கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு www.loomworld.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குளித்தலை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட தகைசால் பள்ளி கட்டிடத்தை இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி பள்ளியை ஆய்வு செய்தார். இதில் பொருளாளர் தமிழரசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 1.07.2024 முதல் நேரடியாக பெறப்பட்டுவருகின்றன. தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வேண்டிய கடைசி நாள் 31.07.2024. மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111) அழைத்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் விவசாயிகளுக்கு வரும் 26.07.2024 அன்று காலை 11.00 மணியளவில் ஜுலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தங்கள் பகுதி விவசாயிகளுக்கும் தெரியப்படுத்திடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை
மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று காலை 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் வெள்ள அபாயம் ஏற்படும். எனவே அமராவதி ஆற்று கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மேட்டுப்பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கரூர் – திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவராட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகிய கலைகளில் வாரம் இரண்டு நாட்கள் (வெள்ளி மற்றும் சனி) மாலை 4 மணி முதல் 6 மணி வரை கிராமிய கலைப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்பில் கலை ஆர்வமுடையவர்கள் மட்டுமல்ல, கலைஞர்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.