India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து, 20.08.2024 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களை அறிய 04324-256257 மற்றும் அலைபேசி 9789630118 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்.பி. கா.பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் சமுகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கரூர் எஸ்பியாக இருந்த பிரபகாரன் மாற்றப்பட்டு புதிய எஸ்பியாக பெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி உத்தரவின்படி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலைவாணி குளித்தலை அனைதது மகளிர் காவல் நிலையத்திற்கும் கரூர் மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜே.கே கோபி அரவகுறிச்சி காவல் நிலையத்திற்கும் ஆரவககுறிச்சி காவல் ஆய்வாளர் நந்தகுமார் கரூர் மாவட்ட குற்ற ஆவணப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 2 காவல் ஆய்வளார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் 2 நாட்கள் நடந்தது. இப்போட்டியில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 24 அணிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதியில் ஆண்கள் பிரிவு போட்டியில் கரூர் அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தமிழ்நாடு முழுவதும் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் கரூரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவிற்கான கடைசி நாள் 25.08.2024 என்றும், https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட ‘மக்கள் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் 10-08-2024 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.