Karur

News July 16, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-யில், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், அரசியல் நிகழ்வுகள், புகார்கள், கோரிக்கைகள் ஆகியவற்றை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 91603 22122, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன் <<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 15, 2024

கரூர் மாவட்டத்தில் நாளை கரண்ட் கட்

image

கரூர் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காந்திபுரம், வையாபுரி நகர், கேவிபி நகர், பெரியார் நகர், மகாத்மா காந்தி சாலை , சேலம் பைபாஸ், அம்பானி கார்டன் அருகம்பாளையம், கொங்கு நகர் மெயின் ரோடு, தங்கம் நகர், எஸ்பி காலனி, அண்ணா காலனி, NSB நகர், சுப்பு கார்டன், வாங்கப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

நெசவாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கரூரில் கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

காலை உணவுத் திட்டம்: கலெக்டர் தொடங்கி வைப்பு

image

கரூர் மண்மங்கலம் அருகே நெரூர் வடபாகம் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியை துவக்கி வைத்த கரூர் கலெக்டர் தங்கவேல் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி உணவளித்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது கரூர் மாநகர மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

News July 15, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 15, 2024

கரூரில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

image

தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், குமரி, தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை மாதத்திற்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று அறிவித்துள்ளார்.

News July 13, 2024

தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

கரூர் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி மற்றும் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி – I) தேர்வு மையங்களை கலெக்டர் மீ.தங்கவேல் இன்று (13.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

கரூர் மாவட்ட எஸ்பி அதிரடி

image

கரூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் எஸ்பி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று கரூர் டவுன், கரூர் ரூரல், குளித்தலை உட்கோட்ட காவல் துறை சார்பில், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.

error: Content is protected !!