India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மக்களே, மிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <
கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த மாமன்ற கூட்டத்தில் கரூர் மாநகராட்சிக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 43 உதவியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கரூர் மாவட்ட திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி நாளை (ஆக 07) காலை 9.30 மணிக்கு கரூர் திமுக அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடைபெற உள்ளது. மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக கரூர் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவ முகாம் வரும் ஆகஸ்ட் 9, 10ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது, இதில் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் வருகை புரிகின்றனர். அனைத்து வகையான ஆலோசனைகள் பரிசோதனைகள் ஒரே இடத்தில் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
கரூர் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
கரூர் மக்களே, அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.22,405 முதல் ரூ.62,265 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் <
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி இராஜேந்திரத்தில் நாளை (ஆக 6) மாலை 6:00 மணிக்கு குளித்தலை மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வாழும் பௌத்தர்களுக்கு, தமிழ்நாடு அரசால் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய பௌத்தர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன் பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.